Home பல்வேறு த.ம.அ., கணித்தமிழ் சங்கம்: மின்னாக்கப் பட்டறை

த.ம.அ., கணித்தமிழ் சங்கம்: மின்னாக்கப் பட்டறை

by admin
0 comment
த.ம.அ., கணித்தமிழ் சங்கம் ஏற்பாட்டில் மின்னாக்கப் பட்டறை 06.12.2009 – அறிவிப்பு

Inbox X

Reply

|
Subashini Tremmel
மின்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். வரும் டிசம்பர் 6ஆம் திகதி தமிழ் மரப…

5:52 PM (5 hours ago)
Subashini TremmelLoading…
5:52 PM (5 hours ago)
Subashini Tremmel
to மின்தமிழ்

show details 5:52 PM (5 hours ago)

மின்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வரும் டிசம்பர் 6ஆம் திகதி தமிழ் மரபு அறக்கட்டளையும் கணித்தமிழ் சங்கமும் ஏற்பாடு செய்யும் மின்னாக்கப் பயிற்சிப் பட்டறை ஒன்று ஏற்பாடாகியுள்ளது. இந்த பட்டறை காலை 10:30க்குத் தொடங்கி மாலை 5 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இரண்டு அங்கங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. காலை தொடங்கி மதியம் வரை த.ம.அறக்கட்டளையின் பணிகள் பற்றிய விபரங்கள், மின்னாக்கப் பணிகளின் அவசியம் என்ற முறையில் உரைகள் நிகழ உள்ளன.

இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக இதனை தொடக்கி வைத்து சிறப்புறையாற்ற உள்ளார் தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர்.ராஜேந்திரன் அவர்கள். இதனைத் தொடர்ந்து மேலும் சில சிறப்புரைகள் இடம் பெறும்.

மதிய உணவிற்குப் பிறகு பட்டறை தொடங்கும். இந்தப் பட்டறையின் முக்கிய நோக்கம் மின்னாக்கப் பயிற்சியினைப் பெற்று கலந்து கொள்ளும் ஒவ்வொரும் தாமாக மின் நூல்கள் மின்பதிப்புக்கள் உருவாக்க பயிற்சி பெற்றுச் செல்வதாக அமையும். மின் நூல்கள் தயாரிப்பு, ஓலைச் சுவடி மின்பதிப்பு, ஒலிப்பதிவுகள் உருவாக்கம், மரபு விக்கியில் தகவல் உள்ளீடு என்ற வகையில் இந்தப் பட்டறை நிகழ உள்ளது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் அன்பர்கள் அனைவரும் நிச்சயமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என தனிப்பட்ட முறையில் நான் விரும்புகிறேன். உங்களில் பலருக்கு ஆர்வம் உள்ளது. ஆனால் தொழில் நுட்ப சிரமங்களை முன் வைத்து மின்பதிப்பில் ஈடுபட முடியாமல் இருக்கின்ற விஷயத்தை உங்களில் சிலர் எனக்குப் பல கடிதங்களின் வாயிலாக தெரிவித்துள்ளீர்கள். அதனைப் போக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன்.

இந்த நிகழ்வுக்காக பல ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளதால் உங்கள் பதிவு மிக முக்கியம். உடன் உங்கள் பெயர்களைத் தெரிவித்து பதிந்து கொள்ளுங்கள். பதிந்து கொள்ள உங்கள் பெயரை எனது மின்னஞ்சல் முகவரிக்கும் திரு.ஆண்டோ பீட்டர் மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்புங்கள்.
50 பேருக்கு மட்டுமே இடம் உள்ளது.

[email protected]
[email protected]

இந்த நிகழ்வில் நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்கள் மூவரை சிறப்பு செய்ய உள்ளோம். இவர்கள் மூவரும்:

* திரு.இன்னம்புரான்
* டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன்
* திரு.அன்னாமலை சுகுமாரன்

வெல்லத்தமிழினி மெல் அச்சாகும் என்பதை நிரூபிக்க உழைக்கும், தமிழ் மரபு அறக்கட்டளைக்கு துணையாக நிற்கும் இந்த மூவரையும் மெல் அச்சு மைந்தர் என்ற சிறப்பு செய்து இந்த விழா/பட்டறை யில் பாராட்டி வாழ்த்த உள்ளோம்.

இந்த பயிற்சிப் பட்டறை மற்றும் விழா சென்னையில் கீழ்க்காணும் இடத்தில் நடைபெற உள்ளது.

Softview Visual Communication
117. Nelson Manickam road, IInd Floor
Chennai-29

உங்கல் பதிவுகளுக்காக உடன் மின்னஞ்சல் அனுப்பி பதிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மதிய உணவும் தேனீர் பலகாரமும் விழாவில் வழங்கப்படும்.

மிக்க அன்புடன்
முனைவர்.சுபாஷிணி

Truecopy
V.Subramanian aum

–~–~———~–~—-~————~——-~–~—-~

You may also like

Leave a Comment