மண்ணின் குரல்: பெப்ரவரி 2014: மகா சிவராத்திரி – ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில்

வணக்கம்.
இவ்வருட மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகைதிருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது. 
Inline image 1
பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம். 
இந்த விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_26.html
யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM
இந்த விழியம், மற்றும் புகைப்படங்கள் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.
Inline image 2
ஆலய வரலாறு
Inline image 3
ஆலயத்தின் உள்ளே
Inline image 4
சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
Inline image 5
சிவலிங்கங்கள் தனி பிரகாரங்களில்
Inline image 6
பூஜைக்கான  தயாரிப்பு பொருட்கள்
Inline image 7
சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
Inline image 8
சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
Inline image 9
நாதஸ்வரக் கலைஞர்கள்
Inline image 10
திரு. தங்க விசுவநாதன்
Inline image 11
மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம்
Inline image 12
சுபா,  திரு.திருநாவுக்கரசு – இல்லத்தில் சிவராத்திரி பூஜைக்கு செல்லும் முன்
Inline image 14
திரு.திருநாவுக்கரசு, பவள சங்கரி – இல்லத்தில் சிவராத்திரி பூஜைக்கு செல்லும் முன்
Inline image 15
சுபா, பவள சங்கரி – இல்லத்தில் சிவராத்திரி பூஜைக்கு செல்லும் முன்
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *