Home Video மண்ணின் குரல்: ஏப்ரல் 2018: மூலிகைகளை அறிவோம் (Medicinal Herbs)

மண்ணின் குரல்: ஏப்ரல் 2018: மூலிகைகளை அறிவோம் (Medicinal Herbs)

by admin
0 comment

வணக்கம்.

மரபு வழி மருத்துவம், பாட்டி வைத்தியம் முதற்கொண்டு சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளிலும் மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும், மருத்துவ குணமுடைய சில செடிகள் அடையாளம் காணப்பட்டு மூலிகை என்று குறிப்பிடப்பட்டு நோய் தீர்க்க பயன்படுத்தப்படுகின்றன. மூலிகை பற்றிய கல்வி பாரம்பரியமாக தங்கள் மூதாதையர் வழியே பலர் அறிந்து கொள்ளும் நிலை இன்றும் பரவலாக உள்ளது.

திருமிகு. வசந்தா அவர்கள் பகிர்ந்து கொண்ட மூலிகைகள், அவற்றின் பலன்கள், அவற்றைப் பயிர் செய்யும் முறைகள் போன்ற பயன்தரும் குறிப்புக்கள் இக் காணொளியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள்

காணொளியை யூடியூபில் காண: https://youtu.be/OA_x5TCWd_M

நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment