Home Video மண்ணின் குரல்: ஜூன் 2018:பேச்சியம்மன் கிராம தெய்வம்

மண்ணின் குரல்: ஜூன் 2018:பேச்சியம்மன் கிராம தெய்வம்

by admin
0 comment

தமிழகத்தின் கிராமங்கள் ஒவ்வொன்றும் வளமான நாட்டார் வழக்காற்றியல் கூறுகளை ஆய்வதற்குக் களமாகக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியே வரலாறு உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியான தெய்வங்கள் உண்டு. அந்த தெய்வங்களை ஒட்டிய ஒரு கதை மரபு உண்டு. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அவ்வூரில் நிகழ்ந்த சில செய்திகளை அழகுபடுத்தியும் சிறப்பித்தும் தெய்வீகத்தன்மை ஏற்றப்பட்டும் வழிவழியாக மக்களால் வணங்கப்படுகின்றன.

கிராம தெய்வங்கள் மக்களோடு நெருக்கமான உறவு கொண்டவை. ஆண் பெண் பால் பாகுபாடு இன்றியும் சாமிக்கு எல்லோருமே பூசை பொருட்களை வைத்து வழிபடலாம் என்ற சுதந்திரப் போக்கு நாட்டார் வழிபாட்டில் இருப்பதை காணமுடிகின்றது.

நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலும் வட்டாரம் சார்ந்தும், சாதி சார்ந்தும் இருக்கின்றன. அதனால் அவற்றின் வழிபாட்டுத் தன்மையும் இந்த அடிப்படையிலேயே அமைந்து விடுவதும் இயல்பாக இருக்கின்றது. ஆனால் இந்த எல்லா சமூகக் கட்டுப்பாடுகளையும் காலப்போக்கில் கறைத்து தன்னுள் செரித்துக் கொண்ட நாட்டார் தெய்வங்கள் சில பொதுத் தன்மையைப் பெற்றிருக்கின்றன. அப்படி பொதுத்தன்மை பெற்ற தெய்வங்களில் ஒன்று தான் பேச்சியம்மன்.

மதுரையின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது பேச்சியம்மன் ஆலயம். சிறிய கிராமத்துக் கோயிலாக இருந்த இக்கோயில் இன்று இவ்வீதியில் முக்கியக் கோயிலாக மக்களின் நம்பிக்கையின் சின்னமாக இக்கோயில் அமைந்திருக்கின்றது. கோயிலுக்குள் இருக்கின்ற ஒவ்வொரு தெய்வ வடிவமும் ஒவ்வொரு கதைப்பின்னனியோடு அமைந்திருக்கின்றன. தாங்கள் விரும்பும் சாமி சன்னிதி ஒவ்வொன்றிற்கும் தாங்களே பூசைப்பொருட்களைக் கொண்டு வந்து பூசையைச் செய்து அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர் இப்பகுதி மக்கள்.

தொன்மங்கள் தான் மனித வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவை. நம்பிக்கையே மனிதரை இயக்கும் உந்து சக்தி. இந்த தொன்மங்கள் நம்பிக்கைகளினால் கட்டப்பட்டு நீண்ட கால வரலாற்றின் பிரதிபலிப்பாக கோயில்களாக வடிவெடுத்திருக்கின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு ஊரும், கிராமமும் இத்தகைய தொன்மங்களைக் கொண்டிருக்கின்றன. இத்தொன்மங்கள் ஆராயப்பட வேண்டும். இவற்றின் வரலாறு அறியப்பட வேண்டும்.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2018/06/blog-post.html
யூடியூபில் காண: https://youtu.be/EAPB_fePmJI

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment