Home E-Books THF Announcement: E-books update: 25/6/2018 *உலகத் திருமறைகள் காட்டும் குடும்ப வாழ்க்கை

THF Announcement: E-books update: 25/6/2018 *உலகத் திருமறைகள் காட்டும் குடும்ப வாழ்க்கை

by admin
0 comment
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …
இன்று “உலகத் திருமறைகள் காட்டும் குடும்ப வாழ்க்கை :  என்ற நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல் குறிப்பு:
ஆசிரியர்: டாக்டர். சரோஜா பாண்டியன், B.A. (ஹிந்தி).,M.A. (தமிழ்)., M.A. M.Phil. (காந்தியச் சிந்தனை)., Ph.D.
பதிப்பு: முதல் பதிப்பு, டிசம்பர் 2010
நூல் குறித்து முனைவர் கண்மணி வழங்கிய முன்னுரையில் …
“உலகத் திருமறைகள் காட்டும் குடும்ப வாழ்க்கை ” என்ற இந்நூலின் மூலம் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் அவர் (டாக்டர். சரோஜா பாண்டியன்) என்றும் ஒரு ஆசிரியராக அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறார். ஆம். அவரது மொழிநடை ஆசிரிய நடை தன்னுணர்ச்சியை வெளிப்படுத்தி அவர் பேசுமிடங்கள் ஒவ்வொரு கூறின் இறுதியிலும் முடிவுரையாக மட்டுமின்றி இடையிடையே ஆங்காங்கு அடிக்கடி இடம்பெற்றுள்ளன.
பன்னிரண்டு திருமுறைகள் என்பது ஒரு பரந்து விரிந்த ஆய்வுப் பரப்பு. எல்லை விரிந்திருந்தாலும் நூலாசிரியர் ஆழமாக ஒவ்வொரு சமயத் திருமறையையும் பயின்றதால் தான் ஒற்றுமை வேற்றுமைகளை அவரால் எடுத்துக்காட்ட முடிகிறது. ஒவ்வொரு சமயத் திருமறையின் தனித்தன்மையும் போக்கும் தெள்ளத் தெளிவான சான்றாதாரங்களோடு பேசப்படுகின்றன.
1. மனிதனுக்கு மனிதன் பாசத்தோடு தொண்டாற்றி வாழ வேண்டும் என்று 12 திருமறைகளும் ஒருங்கே வலியுறுத்துகின்றன.
2. எந்த சமயமும் இல்லறம் என்னும் நல்லறத்தை ஒதுக்கவில்லை .
3. பெற்றவர்களின் முக்கியக் கடமை தாம் பெற்ற பிள்ளைகளுக்கு ஒழுக்கம் பழக்கல் ஆகும்.
4. மானிடர் நெறிப்படுத்தப்பட்ட பாலியல் உறவில் ஈடுபட்டு இல்லறத்திலேயே ஒரு குறிப்பிட்ட வரையறையுடன் கூடிய துறவிகளாய் வாழப் பழக வேண்டும்.
5. குழந்தை கருவிலிருக்கும் போதே பெற்றோரின் கடமை தொடங்குகிறது.
மேற்சொன்ன அனைத்தும் 12 திருமறைகளுக்கும் பொதுவான ஒத்த கொள்கைகள்.
முத்தாய்ப்பாக அரசு வெளியிடும் பாடப் புத்தகங்களில் “திருமறை” பகுதிக்கு தனியிடம் ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
என்று நூல் குறித்து அறிமுகம் செய்கிறார்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 473
மின்னாக்கம் மற்றும் மின்னூலாக்கம்: 
தனது அன்னை எழுதிய  நூலை முனைவர். கண்மணி கணேசன்
முதல்வர் (ஒய்வு ), ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி. அவர்கள் மின்னூலாக வழங்கியுள்ளார்.
அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​
_______________

You may also like

Leave a Comment