மண்ணின் குரல்: டிசம்பர் 2018: நடமாடும் கண்காட்சிக் கூடம் -திரு.வீரராகவன் சேகரிப்புக்கள்

அருங்காட்சியகங்கள் செல்வோர் அங்கு காட்சி படுத்தப்படும் பல்வேறு அரும்பொருட்களைப் பார்த்து  வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். இதனால் கற்றல் என்பது சுவாரச்சியமானதாக அமைகின்றது.
ஒரு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திரு.வீரராகவன். வரலாற்றின் மீது தான் கொண்ட தீராத ஆர்வத்தினால் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று சேகரித்த அரும்பொருட்களைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொது நிகழ்வுகளிலும் கண்காட்சியாக அமைத்து பொதுமக்களுக்குத் தமிழக வரலாற்றினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். அவரோடு துணையாக இருந்து கண்காட்சிகள் சிறப்புடன் நடைபெற உதவி வருகின்றார் திருமதி மங்கை வீரராகவன்.
கண்காட்சிகள் மட்டுமன்றி வரலாற்று நூல்களையும் எழுதி பதிப்பித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியின் ஒரு கண்காட்சியை அண்மையில் இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரும்பொருட்களையும், தமது சேகரிப்புக்கள் பற்றியும், நடுகல்களின் படிகளைப் பற்றியும் பற்பல தகவல்களைத் தருகின்றார் திரு.வீரராகவன்.
யூடியூபில் காண:     https://youtu.be/4KpEI-iPxAM
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *