THF Announcement: E-books update: 25/3/2019 *ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …
இன்று “ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு” என்ற அன்பு பொன்னோவியம் அவர்களின் மின்னூல் இணைகின்றது.
நூல் குறிப்பு:
நூல்: ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு
ஆசிரியர்: அன்பு பொன்னோவியம்
வெளியீடு: தலித் உரையாடல் அவை (DDF – Dalit Dialogue Forum), சென்னை
மின்னூல் பதிப்பு: முதல் பதிப்பு, பிப்ரவரி  – 2019
பதிப்பாசிரியர்: கௌதம சன்னா
ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை குறித்து அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்கள் தாம் நடத்திய அறவுரை என்னும் இதழில் பல்வேறு காலகட்டத்தில் எழுதியவை மின்னூலாக திரு. கௌதம சன்னா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. திரு.வி.க. அவர்களின் குறிப்பும் இந்நூலில் இடம் பெறுகிறது. தலித் உரையாடல் அவையின் 2 ஆவது வெளியீடான இந்நூல் ஒரு கைப்பேசி அடக்க வெளியீடு. தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரத்திற்கு இதை வழங்கிய திரு. கௌதம சன்னா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி உரித்தாகிறது.
மின்னாக்க அனுமதி: தலித் உரையாடல் அவை
மின்னூலாக்க உதவி: திரு. கௌதம சன்னா
அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை ( www.tamilheritage.org)

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *