Home Video மண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திர தடாகமும் சிதலமடைந்த பிள்ளையார் கோயிலும்

மண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திர தடாகமும் சிதலமடைந்த பிள்ளையார் கோயிலும்

by admin
0 comment
17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் முதலில் காணச் சென்ற இடம் மகேந்திரவாடி.
அங்கு மகேந்திரவாடி குடைவரைக் கோயிலின் எதிர்புரத்தில்  சிதலமடைந்த ஒரு கோயில் உள்ளது.  அதில் ஐரோப்பியர் தோற்றத்தில் கோபுரத்தில் காணப்படும் உருவங்கள், புடைப்புச் சிற்பமாக பிள்ளையார் என இக்கோயில் காட்சியளிக்கின்றது. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இல்லாத, ஆனால் மக்கள் வழிபாட்டில் உள்ள ஒரு கோயிலாக இது உள்ளது.
இதற்கு சற்று தூரத்தில் மகேந்திர தடாகம் உள்ளது. அன்று நீர் நிறைந்து விவசாய வளம் செழிக்க ஆதாரமாக இருந்த மகேந்திர தடாகம் இன்று நீரின்றி காய்ந்து பாலைவனம் போலக் காட்சியளிக்கின்றது. மிக விரிவாக தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் இந்த தடாகம் பற்றி விளக்கமளிப்பதை இப்பதிவில் காணலாம்.
விழியப் பதிவை முழுமையாகக் கண்டு,  மகேந்திரவாடியின் வரலாற்றை அறிவோம்.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
யூடியூபில் காண:    https://youtu.be/tNlAiOCCBV8
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment