Home Video மண்ணின் குரல்: ஏப்ரல் 2019 – திருவலம் – வந்தியத்தேவன் பெயர் சொல்லும் ஊர்

மண்ணின் குரல்: ஏப்ரல் 2019 – திருவலம் – வந்தியத்தேவன் பெயர் சொல்லும் ஊர்

by admin
0 comment
17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில்  மகேந்திரவாடி குடைவரைக் கோயிலுக்குப் பின்னர் நமது குழுவினர் சென்ற ஊர் திருவலம்.  பொன்னியின் செல்வன் வரலாற்று நாயகன் வந்தியத்தேவன் பிறந்த ஊர். இங்கு ஓடும் பாலாறு இன்று நீரின்றி காய்ந்து மணல் நிறைந்து காணப்படுகிறது.
இப்பதிவில்
  • திருவலம் (திருவல்லம்) வில்வநாதேசுவரர் கோயில்
  • இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள்
  • வில்வநாதேசுவரர் கோயிலில் உள்ள 39 கல்வெட்டுக்கள்
  • இங்குள்ள கற் தொட்டியும் அதில் வடிவமைக்கப்பட்ட பெண்களின் சிற்பங்களும்
  • வலம்புரி விநாயகர்
  • வில்லோடு தோன்றும் வேடர் குலப் பெண்  சிற்பம்
  • உடுக்கையுடன் காட்சியளிக்கும் கங்காள மூர்த்தி
  • கங்காள மூர்த்தி  சிற்ப உருவத்தின் விளக்கம்
என இன்னும் பல செய்திகள்..
மிக விரிவாக  இவற்றை தொல்லியல்  அறிஞர் திரு.ஸ்ரீதரன் விளக்கமளிப்பதை இப்பதிவில் காணலாம்.
விழியப் பதிவை முழுமையாகக் கண்டு, நம்  வரலாற்றின் சில பகுதிகளை  அறிவோம்.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
நன்றி: ஓவியம் – திரு.குமரகுருபரன்
யூடியூபில் காண:    https://youtu.be/bz263F4ZqII
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment