Home E-Books THF Announcement – E-books update: *ஸ்ரீ அத்திகிரி வரதர் வரலாறு

THF Announcement – E-books update: *ஸ்ரீ அத்திகிரி வரதர் வரலாறு

by admin
0 comment

THF Announcement – E-books update: *ஸ்ரீ அத்திகிரி வரதர் வரலாறு 
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … புலவர் பெருமாள் அவர்களின் “ஸ்ரீ அத்திகிரி வரதர் வரலாறு”  என்ற மின்னூல் இணைகின்றது.

1.jpg

நூல் குறிப்பு:ஸ்ரீ அத்திகிரி வரதர் வரலாறு  ஆசிரியர்:  புலவர் பெருமாள்அச்சுப் பதிப்பு: முதல் பதிப்பு, 1978வெளியீடு: வாசன் பிரசுரம் 
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்து  நீரில் மூழ்கியிருக்கும் காஞ்சி அத்திவரதர் நீரை விட்டு வெளிவந்து  48 நாள்களுக்கு தமது அடியவர்களுக்கு அருள்புரியும் நிகழ்ச்சி இப்பொழுது தமிழகத்தில் நடந்து வருகிறது.
காஞ்சி மாநகரமே ஒரு பெருந்திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை-1 ம் தேதி எழுந்தருளிய அத்திவரதர், சென்ற முறை 1979-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி எழுந்தருளினார்.  அதையொட்டி 1978 ஆம் ஆண்டு புலவர் பெருமாள்  எழுதிய ‘ஸ்ரீ அத்திகிரி வரதர் வரலாறு’ என்ற நூலை வாசன் பிரசுரம் வெளியிட்டது.
1. காஞ்சியும் அத்திகிரியும் 2. அத்திகிரி வரதர் ஆன மகிமை 3. அத்திகிரி வரதர் நீரில் கிடந்த மர்மம் 4. பிரம யாகத் தீயின் தகிப்போ ?5. அத்திகிரி  வரதர் தரிசன விசேடம் 6. அத்திகிரி வரதர் திருப்பாடல்கள் 
என்ற அத்தியாயத் தலைப்புகளில் நூல் எழுதப்பட்டுள்ளது.
இதில் கிளைவ் அத்தி வரதருக்கு வழங்கிய நகைகள் படம் உள்ளது. இதில் வழங்கும் புராணக்கதை இன்றைய கதையிலிருந்து வேறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் தலவரலாறாகக் கூறப்படும் கதை எதுவும் இன்று கூறப்படவில்லை  என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கஜினி முகமது தாக்குதலுக்குக் காஞ்சி உட்பட்டது, காஞ்சி புத்தர் கோவிலாக மாற்றப்பட்டது என்று பலகதைகளையும்  ஆய்வு நோக்கில் அணுகலாம். இந்த சிறிய நூல் ஆன்மிக நேயர்களுக்கு ஒரு விருந்தோ இல்லையோ, வரலாற்று ஆய்வாளர்களுக்கு, கோவில் திருத்தல  தொன்ம ஆர்வலர்களுக்கு ஆய்வு நோக்கில் 40 ஆண்டுகள் கால இடைவெளியில் தொன்மங்கள் உருவாக்கப்படும், மாறும் தன்மை குறித்து அறிய ஒரு நல் வாய்ப்பு.
 இந்த சிறிய நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தின்  மின்னூல்கள் வரிசையில் இணைக்கப்படுகிறது.
இந்நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு மின்னூலாக்கி வழங்கியவர்  திரு. சரவணன் குமாரகாளத்தி.  அவருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
நூல் ஆசிரியர்: புலவர் பெருமாள்நூல் உருவாக்க உதவி:   திரு. சரவணன் குமாரகாளத்தி

நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:http://www.tamilheritage.org/old/text/ebook/THF_AthiVaradar-PulavarPerumal.pdf

நன்றி.
அன்புடன்தேமொழி தமிழ் மரபு அறக்கட்டளை [www.tamilheritage.org]

You may also like

Leave a Comment