Home Events சங்கரலிங்கபுரம் பள்ளியில் விதை நடுதல் மற்றும் நூலகத் திறப்புவிழா

சங்கரலிங்கபுரம் பள்ளியில் விதை நடுதல் மற்றும் நூலகத் திறப்புவிழா

by admin
0 comment

சங்கரலிங்கபுரம் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி தமிழ் மாணவர் மரபு மையம் சார்பாக 2000 விதைகள் நடும் விழா மற்றும் நூலகத் திறப்புவிழா.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையங்களில் ஒன்றாக இயங்கி வரும் பேரையூர் – சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் நல உயர் நிலைப்பள்ளியில் 2000 விதைகள் நடும் விழா மற்றும் நூலகத் திறப்புவிழா நடைபெற உள்ளது.

பள்ளி மாணவர்களிடையே இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்ச்சியை மேம்படுத்தவும், மர விதைகளைச் சேகரிப்பது, மரங்களை நடுவது போன்ற செயல்களில் ஆர்வத்தை ஈடுபடுத்தும் வகையிலும் ஒரு நாள் நிகழ்வு ஒன்றினை தமிழகத்தின் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சங்கரலிங்கபுரம் எனும் சிற்றூரில் உள்ள அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியில் 21.09.2019 சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு நிகழ்த்த ஏற்பாடாகி உள்ளது.

2000 விதைகள் நடும் விழா நிகழ்ச்சிக்காக மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் – புகைப்படங்கள் திரு.சி.மு.பாலச்சந்தர்.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக சங்கரலிங்கபுரம் பள்ளியின் நூலகத்தைப் புதுப்பித்து மேம்படுத்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பள்ளி மாணவர் மரபு மையப் பொறுப்பாளர் ஆசிரியர் திரு.சி.மு.பாலச்சந்தர் இந்த ஏற்பாடுகளை முன்னின்று செய்துவருகிறார்.

நமது நூலக திறப்பு விழா நிகழ்ச்சிக்காக நூலகம் தயாராகிக் கொண்டிருக்கின்றது – புகைப்படங்கள் திரு.சி.மு.பாலச்சந்தர்.

இவ்விழாக்களில் பங்கு கொள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

அனைவரும் வருக.

You may also like

Leave a Comment