Home Video முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட புன்னைக்காயல்

முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட புன்னைக்காயல்

by admin
0 comment

THF Heritage Video Release Announcement
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – அக்டோபர் – 2019

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுச் சுற்றுலாவில் புன்னைக்காயல் குறித்து சுற்றுலாவில் பங்கு பெற்ற வரலாற்று ஆர்வலர்கள் பல தகவல்களை அறிந்து கொண்டனர்.
முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் புன்னைக்காயல்.
தமிழகத்தின் முதல் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்ட பெருமை பெற்றதும் இப் புன்னைக்காயல்தான்.
தமிழில் முதன்முதலில் அச்சு நூல்களை வெளியிட்டவர் – தமிழ் அச்சு வரலாற்றைத் தொடங்கியவர்
அறிஞர் அண்டிரிக் அடிகளார் (ஹென்றிக்கு ஹென்றிக்கஸ் – Henrique Henriques, 1520–1600)

அண்டிரிக் அடிகளார் போர்த்துகீசிய நாட்டிலுள்ள ‘விலாவிகோசா’ என்னும் ஊரில் கி.பி. 1520-ல் பிறந்தார்
சமயப்பணிக்காக 17.9.1546-ல் இந்தியா வந்தவர், 06.02.1600-ல் தமது 80-ம் வயதில் புன்னைக்காயலில் காலமானார்

அண்டிரிக் அடிகளார் அச்சில் கொணர்ந்த நூல்கள்:

  1. ‘தம்பிரான் வணக்கம்’ (Thambiran Vanakkam -1578)
    தமிழில் அச்சான முதல் நூல் – Doctrina Christiana
    என்ற போர்த்துகீசிய நூலின் தமிழாக்கம் -கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது
  2. ‘கிரீசித்தியானி வணக்கம்’ (Kirisithiyaani Vanakkam – 1579)
    -கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது
  3. ‘கொம்பெசியனாயரு’ (1579) -கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது
  4. ‘அடியார் வரலாறு’ (1586)
    தூத்துக்குடி மாவட்டம் – புன்னைக்காயலில் இந்நூல் அச்சடிக்கப்பட்டது

அண்டிரிக் அடிகளார் தொண்டு குறித்தும், அண்டிரிக் அடிகளார் அச்சில் கொணர்ந்த நூல்கள் குறித்தும், புன்னைக்காயல் மற்றும் அதன் தேவாலயம் குறித்து விளக்கமளித்த அருள் முனைவர் அமுதன் அடிகள் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:
முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட புன்னைக்காயல் | THFi Punnaikayal

அன்புடன்
முனைவர். தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment