Home Events வரலாற்று சின்னங்களை ஆய்வுக்குழுவினர் பார்வை

வரலாற்று சின்னங்களை ஆய்வுக்குழுவினர் பார்வை

by admin
0 comment

வரலாற்று சின்னங்களை ஆய்வுக்குழுவினர் பார்வை

ஜன 06, 2020 05:05
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள வரலாற்றுச்சின்னங்களை, கோவில்கலை சமூக ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு, மாணவியருக்கு விளக்கமளித்தனர்.உடுமலை கோட்டமங்கலம், குடிமங்கலம், கொங்கல்நகரம், மதகடிபுதுார் உட்பட இடங்களில், பெருங்கற்கால மற்றும் மன்னர்கள் காலத்தைச்சேர்ந்த பல்வேறு வரலாற்றுச்சின்னங்கள் உள்ளன. இச்சின்னங்களை, கோவில்கலை சமூக ஆய்வாளர் சசிகலா தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.குடிமங்கலம் கல்வெட்டு, கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவில் வீரகம்பம், கொங்கல்நகரம் நெடுகல், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், மதகடிபுதுார் பாறை ஓவியங்களை இக்குழுவினர் பார்வையிட்டனர்.அக்குழுவினருடன் சென்ற, தனியார் கல்லுாரி வரலாற்று துறை மாணவியருக்கு, வரலாற்று சின்னங்களின் தொன்மம், அவற்றை பாதுகாப்பதின் அவசியம் குறித்து, சசிகலா விளக்கமளித்தார்.தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2451490

You may also like

Leave a Comment