Home Events தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு சபாஷ் – இந்து தமிழ் திசை

தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு சபாஷ் – இந்து தமிழ் திசை

by admin
0 comment
“இந்து தமிழ் திசை” -13 ஜூன், 2020

கரோனா காலத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை 
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு, க.சுபாஷினி தலைமையில் இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளையானது உலகத் தமிழர்களை இணைக்கும் பாலமாகச் செயல்பட்டுவருகிறது. 
ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை நிறுவியது. ஜெர்மானிய திருக்குறள் மொழிபெயர்ப்பு, குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருள் உருவாக்கியது ஆகியவை இந்த அறக்கட்டளையின்சமீபத்திய சாதனைகள். 
தமிழ் மரபைப் பாதுகாப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த அறக்கட்டளை இப்போது கரோனா காலத்திலும் அந்தப் பணியைத் தொடர்ந்தது. ஏப்ரல், மே மாதங்களில் மட்டும்100 தலைப்புகளில் பல்துறை அறிஞர்களை ஒருங்கிணைத்து ஆய்வுரை நிகழ்த்தியிருக்கிறார்கள். 
உலக அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு, மே 19 அன்று தமிழக அருங்காட்சியகங்கள் வாரமும் கொண்டாடப்பட்டது. தமிழகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உட்பட, தமிழகத்தில் உள்ள அனைத்து அருங்காட்சியக இயக்குநர்களும் கலந்துகொள்ளும் வகையில் அந்நிகழ்ச்சி அமைந்தது. 
தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு சபாஷ்

“இந்து தமிழ் திசை” -13 ஜூன், 2020

You may also like

Leave a Comment