வணக்கம்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட உள்ளோம்.
இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.
அந்த வகையில் முதலில் வருவது திருத்துருத்திக் கச்சிவிநாயகர்பதிகம். குற்றாலம் என தற்சமயம் வழங்கப்பெறும் இடத்தில் அமைந்துள்ள பதியில் வீற்றிருக்கும் விநாயகக் கடவுளுக்கு இயற்றப்பட்ட பதிகம் இது.
இப்பிரபந்தத் திரட்டு நூலினைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கம் செய்ய அனுமதி அளித்த திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகத்தினருக்கும் ஆதீனகர்த்தருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி
திருவாவடுதுறை மடம் – ஆதீனகர்த்தர் மக்களை சந்திக்கும் கூடம்
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
2 comments
'உ' என்று பிள்லையார் சுழி போட்டு வணன்கிகொள்கிறேன். திருவாவடுதுறை ஆதீன கர்த்தருக்கு வணக்கம். சுபாஷிணிக்கு வாழ்த்துக்கள். தமிழ் மரபு வாழ்க!
அம்மையார் சுபாஷினி போன்று உழைத்திடுவது கடினம்.
கோவிலூர் மடத்தில் சுபாஷினி அவர்களும் ஐயா வினைதீர்த்தான் அவர்களும் மிகவும் விரைவாகச் செயல்பட்டு நூல்களை மின்னாக்கம் செய்ததைக் கண்டு வியந்துபோனேன்.
ஏழு ஆண்டுகளுக்கு முன் தருமபுரம் சென்று ஆசிபெற்றுள்ளேன்.
ஒருநாள் இரவு வழிபாடு முழுவதும் மகாசந்நிதானத்துடன் இருக்கும் பேறு கிடைக்கப்பெற்றேன். அருமையான நாட்கள்.
ஐயா ‘இ‘னா அவர்கள் குறிப்பிடுவதுபோல் இவையெல்லாம் தெய்வசங்கல்பமே.