வணக்கம்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.
இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.
இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:
திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 319
நூலை வாசிக்க!
நூல் மின்னாக்கம்: முனைவர்.சுபாஷிணி , பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி
திருவாவடுதுறை மடத்தின் உள்ளே பண்டார சாச்திரங்களும், பன்னிரு திருமுறை நூல்களும் மெய்கண்ட சாஸ்திர நூல்களும் சம்பிரதாயத்திற்காக வைக்கப்பட்டுள்ள இடம்.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
1 comment
நல்வரவு. திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகையின் திருவருள் உமக்கு உறுதுணை.