Home பல்வேறு THF Announcement: ebooks update: 26/May/2013 *திருஅம்பர் புராணம்*

THF Announcement: ebooks update: 26/May/2013 *திருஅம்பர் புராணம்*

by admin
0 comment
வணக்கம்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.
இன்று வெளியீடு காண்பது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய திருஅம்பர் புராணம் எனும் ஒரு தலபுராண நூல். ஏறக்குறைய 350 பக்கங்கள் கொண்ட நூல் இது.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 320
நூல் மின்னாக்கம்: முனைவர். சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர். சுபாஷிணி
இந்த மின்னூல் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் திருவாவடுதுறைக்கு நான் சென்றிருந்த போது அங்கே மடத்திலேயே தேடி எடுத்து மின்னாக்கம் செய்யப்ப்ட்ட நூல். இதனை மின்னாக்கம் செய்ய உதவிய திருவாவடுதுறை மடத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment