Home பல்வேறு தமிழ் மரபு அறக்கட்டளையின் 2014 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பிதழ்

தமிழ் மரபு அறக்கட்டளையின் 2014 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பிதழ்

by admin
0 comment
வணக்கம்.
2013ம் ஆண்டு முடிந்து 2014ம் ஆண்டு இன்று தொடங்குகின்றது. 
கடந்த ஆண்டில் அனுபவங்கள் பலவகையாக நம் ஒவ்வொருவருக்கும் அமைந்திருக்கலாம். தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆண்டு அனுபவங்கள் யாவும் புதிய வெளியீடுகளின் வடிவில் மின்னூல்களாகவும், கட்டுரைகளாகவும், ஒலிப்பதிவுகளாகவும் விழியப்பதிவுகளாகவும் வெளியிடப்பட்டன.
பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டினை வரவேற்க நம் நண்பர்கள் சிலரது ஆக்கங்களை இங்கே இணைத்திருக்கின்றேன்.  இந்த ஆங்கிலப்புத்தாண்டின் விடுமுறை நாளில் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இணைந்து இந்த வெளியீடுகளையும் வாசித்தும், பார்த்தும், கேட்டும் மகிழுங்கள்!
Inline image 2
விழியப் பதிவு
பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் – ஹிந்து,  பௌத்த சமய தடையங்கள்
மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒரு விழியப்பதிவே இன்றைய சிறப்பு பதிவாக வெளியிடப்படுகின்றது.
இந்த விழியம் 2 பகுதிகளாக உள்ளது. இன்று 25 நிமிடங்கள் கொண்ட முதல் பதிவு வெளியிடப்படுகின்றது. இப்பதிவில் நான் வழங்கும் கெடா பூஜாங் பள்ளத்தாக்கு வரலாறு, ஆலயங்கள் பற்றிய விளக்கங்கள், சோழர்களின் ஆட்சி, பௌத்த ஹிந்து மத ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன.
விழியப் பதிவு: டாக்டர். நா.கண்ணன், முனைவர்.க. சுபாஷிணி
விழியத் தயாரிப்பு: முனைவர்.க. சுபாஷிணி
நமது வலைப்பூவில் இந்த விழியத்தை இங்கே காணலாம். http://video-thf.blogspot.com/2013/12/blog-post_30.html

யூடியூபில் இங்கே காணலாம்http://www.youtube.com/watch?v=G496Az-sgFg
மின்னூல்
1.
நூல் பெயர்: திருவாதவூரர் புராணம் – மூலம் அருஞ்சொற் பொருளகராதியுடன்
நூல் ஆசிரியர்: கடவுண் மாமுனிவர்
வெளியீடு: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி
1923ம் ஆண்டு அச்சு பதிப்பு கண்ட ஒரு அரிய நூல் இன்று மின்னூலாக வடிவம் பெறுகின்றது.
இந்த நூலினை நம் மின்னாக்கப்பதிவிற்காக வழங்கியவர் முனைவர்.காளைராசன். இதனை மின்னூலாக்கி நமக்கு அளித்திருக்கின்றார் டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன். தொடர்பு உதவி கீதா.
2. நூல் பெயர்: சூரைப் புராணம்
டாக்டர்.நா.வள்ளி அவர்களின் அரிய முயற்சியிலும்  அவர்கள் துணையுடனும் இப்புராணம் மின்னாக்கம் பெற்றிருக்கின்றது. நூல் உருவான காரணம், வரலாறு, முழு நூல் அனைத்துமாக இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைந்திருக்கின்றது. 
விபரங்களை அறியவும் நூலை வாசிக்கவும் இங்கே செல்க!
கவிதை
புத்தாண்டு பிறக்குது – திரு.ஜெயபாரதனின் புத்தாண்டுக் கவிதை.

கட்டுரை
1. பார்வதி ராமச்சந்திரன் – ஜபம்
கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியில், மன அமைதி என்பது பலருக்கும் கிட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்தப் புனித பாரத மண்ணில் தோன்றிய ஞானியரும், யோகியரும், மஹான்களும், மன அமைதி, நிம்மதி மட்டுமல்லாது, இறைவனின் சந்நிதியையும் சாயுஜ்யத்தையும் அருளும் மிக எளிமையானதொரு வழியை, நமக்குக் காட்டிச் சென்றுள்ளனர். அற்புதமான மார்க்கம் அது. ‘ஜபம்’ என்ற இந்த ஒற்றை வார்த்தையின் பொருளை முழுமையாகப் புரிந்து கொண்டு, பயன்படுத்துபவர் நிச்சயம் பேறு பெற்றவர்களே!! இது சாமானியர்களும் மனிதப் பிறவியின் பயனை அடைவதற்காக அருளப்பட்ட உன்னத சாதனம்.
பொதுவாகவே ஒலி வடிவங்கள் ஒருவரது மனதிலும் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திறனுடையவை. நேர்மறை மற்றும் எதிர்மறையான சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒன்று. இசையின் மகத்துவம் அறியாதவர் யார்?. இறை நாமம் அல்லது மந்திரம் சொல்வது, நம் உடலில் நேர்மறையான விளைவுகளைத் தரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
2.இன்னம்பூரான் – எனது இந்தியா
‘பிரிட்டனை உருவாக்கியவர்கள்’ (Making Britain) என்ற தலைப்பில் ஒரு இந்தியர் அந்த நாட்டின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் கொண்டாடப்படுகிறார். அவர் தான் இன்றைய தலை மாந்தர்.
மினூ மஸானி என்ற தேசாபிமானி ‘நமது இந்தியா’ (Our India)  என்ற நூலை 1940ல் எழுதினார். மக்கள் விரும்பிப்படித்த நூல். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு தனது அபிமானங்களில் பல மாற்றங்களைக் கண்ட அவர் ‘இந்தியர்களாகிய நாம்’ (We Indians) என்ற நூலை 1989ல் எழுதினார்.  
3. திவாகர் – பாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம்
இருபதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோதும் சரி, அதற்குப் பிறகு சுதந்திரமடைந்த இந்தியாவிலும் சரி, வேலை இல்லா திண்டாட்டம் என்ற ஒன்று மக்களைப் பாடாய்ப் படுத்தியதால் எங்கெல்லாம் வேலை இருக்கின்றதோ எங்கெல்லாம் வாழ்வாதாரத்துக்கு சந்தர்ப்பங்கள் தோன்றுகின்றனவோ எங்கெல்லாம் சென்றால் உழைப்பால் பசியை வெல்லலாம் என்று தோன்றியதோ அங்கெல்லாம் மக்கள் மொழி பேதமில்லாமல் குவியத் தொடங்கினர் என்பதை யாரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் இக்கட்டுரை இப்படி சமீபகாலங்களில் நடைபெற்ற மாற்றங்களை விட்டு சற்று ஆழமாக திரும்பிப்பார்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. 
4. பவள சங்கரி – பாரதத்தின் 
தினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காள நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உரிமையுடன் உச்சரிக்கப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த பெயர் என்றால் அது ராணி பவானி என்பதுதான்.  தன்னுடைய நிர்வாகத் திறன், அரசியல் செல்வாக்கு மற்றும் தாராள குணம்  மூலமாக இன்றும் அந்த மக்களின் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். ரமாகந்தா என்ற ராஜ்ஷாகியைச் சேர்ந்த ஜமீந்தாரின் மனைவி இவர். ஜமீந்தார் ரகுநந்தன் அவர்களின் மகன் தான் ரமாகந்தா. 


உரையாடல்
தனிமை இரக்கமா அல்லது இனிமையா – சிவகாமிப் பாட்டியின் தத்துவக் கீறல்கள் – டாக்டர் நாகராசன் வடிவேல்.
புதிய ஆண்டில் சிவகாமிப் பாட்டி தத்துவம் சொல்கின்றார். இவரின் தத்துவத்தை வாசிக்க…. இங்கே செல்க!
வாழ்த்துச் செய்தி
தமிழ்த்தேனியார் வழங்கும் புத்தாண்டு செய்தி.
கால  ஓட்டம்  ,காலச் சுழற்சி  கனவேகமாய் சுழன்று கொண்டிருக்கிறது.  நிறுத்த முடியாத, மீண்டும்  பெறமுடியாத  காலங்கள்.அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது, மறந்து விடாதீர்கள் இப்போதும்,எப்போதும்  ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமாய், இந்த    நிமிடத்திலிருந்தாவது  ஏற்கெனவே  செய்த தவறுகளைக் களைந்து  இனி செய்யப்போகும்  செயல்களை  இன்னும் சிறப்பாய்  செய்யப் பழகுவோம்.  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



குறள்
1. முப்பாலும் கலந்து – துரை.ந உ.


2. முனைவர் காளைராசன் – இரண்டு திருக்குறட்பாக்களுக்கான புதிய சிந்தனைகள் 
ஐயன் திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணைநலம்‘ என்ற அதிகாரத்தில்
“தெய்வந்  தொழாஅள்  கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப்  பெய்யும்  மழை“ (55)
என்று குறள் கூறியுள்ளார்.
Inline image 1
2014 ஆங்கிலப் புத்தாண்டு இனிய அனுபவங்களை வழங்கட்டும். அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment