Home Video மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் கிராமப்புர ஆலய பெண் பூசாரி

மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் கிராமப்புர ஆலய பெண் பூசாரி

by admin
1 comment
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. 
மலேசியாவில் 1920லிருந்து 1940வரை ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை தோட்டங்களை உருவாக்கவும் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் கப்பலில் நாகப்பட்டினம் வழியாக பிரித்தானிய காலணித்துவ அரசினால் அழைத்து வரப்பட்டனர். நாமக்கல் பகுதியிலிருந்து வந்தவர்களில் பலர் கேரித் தீவில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.
அப்படி வந்தவர்களில் பலர் இன்னமும் கேரித் தீவிலேயே தங்கி வாழ்கின்றனர். இங்கு வாழும் ஒரு பெண்மணி கோயில் ஒன்றினைத் தமது குடும்பத்தார் உதவியுடன் அமைத்து அதற்கு தாமே பூசாரியாகவும் இருந்து செயல்படுகின்றார். 

பூசை மந்திரங்கள் ஏதும் அறியாதவர். ஆனால் காலை மாலை கோயிலைச் சுத்தம் செய்து பூசை செய்து வழிபாடு இந்த ஸ்ரீ ராஜமுனீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்வதை பார்த்துக் கொள்கின்றார். அருகாமையிலேயே அவரது இல்லமும் இருக்கின்றது. 
எழுதப் படிக்கத் தெரியாதவர். ஆனால் கற்பனையிலேயே பாடல் பாடக் கூடியவர். அவரது கோயில் பூசையையும் கற்பனை திறத்தில் அவர் பாடும் மக்கள் நலன் நாட்டுப் பாடல் ஒன்றையும் காட்டும் விழியப் பதிவே இன்று வெளியிடப் படுகின்றது.
விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2014/09/blog-post_3.html
யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=9gGCE08n7O4&feature=youtu.be
இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.
புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!
இப்பதிவினை கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

You may also like

1 comment

சீராளன் September 4, 2014 - 9:52 am

வணக்கம் !

வாழும் கலைகள் வளமுறு நற்பணியில்
சூழும் பெருமை சுடர்ந்து !

அமிழ்தக் கடலுள்ளே ஆழ்ந்தெடுத்த முத்துசுபா
இம்மண்ணில் இல்லையிவள்(க்) கீடு !

வாழ்க வளமுடன்

Reply

Leave a Comment