மண்ணின் குரல்: அக்டோபர் 2014: மலேசியத் தமிழர்களின் வாழ்வியல்: 20ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை – பகுதி 1

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கடந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தவர்கள் பலர் மலேசியாவின் பல மாநிலங்களில் தங்கி தங்களின் புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆயினும் பலர் இன்னமும் தமிழகத்துடன் தொடர்பு வைத்திருப்பதை நன்கு காண்கின்றோம். இத்தகைய விஷயங்களையும் பதிவு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழியப் பதிவு முயற்சிதான் இது.

இந்தியாவில் பெண் எடுத்து மலேசிய மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பர் இக்காலத்தில் ஆனால் 1960களிலும், 70களிலும் மலேசியாவிற்கு வந்த இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  சிலர் இந்தியாவிற்குப் பெண்ணை திருமணம் முடித்து அனுப்பி வைத்தனர்.
அப்படி ஒரு அனுபவத்தைக் கொண்டவர் தான் திருமதி.வசந்தா. இவர் இந்தியாவில் திருவாரூரில் பிறந்து மிக இளம் பிராயத்தில் மலேசிய பினாங்கு மானிலத்தில் வளர்ந்து அங்கே கல்வி கற்று பின்னர் பெற்றோர் விருப்பத்தின் பேரில் இந்தியாவில் தஞ்சையில் ஒரு கிராமத்து அதிகாரிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். அங்கிருந்த இவர் 25 ஆண்டுகள் இணைந்திருந்த அவ்வாழ்க்கையில் அவரது கணவர் மற்றொரு பெண்ணை மணம் முடிக்க விரும்பவும் அதற்கு உற்றார் உறவினர் சமாதானம் சொல்லி  இவரிடம் சம்மதம் பெறவும் முயற்சி செய்த போது மனம் வருந்தி  தனது 50வது வயதில் தஞ்சையிலிருந்து வெளியேறி பினாங்கிற்கு வந்து சேர்ந்தார்.
புது வாழ்க்கையை மீண்டும் தனது 50ம் வயதில் பினாங்கில் தொடங்கினார். இப்போது பினாங்கிலேயே உத்தியோகம் பார்த்துக் கொண்டு உறவினரோடு சேர்ந்திருந்து சமூகத்  தொண்டும் செய்து வருபவர் இவர். 64 வயது பெண்மணி. 
சென்ற ஆண்டு நான் கேரித் தீவிற்குச் சென்ற போது என்னுடன் எனது பேட்டியில் உதவுவதற்காக வந்தவரை அவர் கதையைச் சொல்லச் செய்து பேட்டி செய்தேன்.
இயல்பான பேச்சில் அமைந்தது இப்பதிவு. 
மக்கள் வாழ்க்கையும் சரித்திரம் தானே.   தனது அனுபவங்களைச் சொல்கின்றார். அதிலும் குறிப்பாக இந்த முதல் பதிவில் தனது இளம் பிராயத்து மலேசியாவில் பினாங்குத் தீவில் தனது பள்ளிக்கூட அனுபவங்களைச் சொல்கின்றார். இவை 1960களில் நடந்த விஷயங்கள். கேட்டுப் பாருங்கள்!​
விழியப் பதிவைக் காண:    http://video-thf.blogspot.de/2014/10/20-1.html
யூடியூபில் இப்பதிவைக் காண:     https://www.youtube.com/watch?v=nLj7-674LWI&feature=youtu.be
இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.
இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *