வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: பிளேட்டோவின் அரசியல் (Plato’s Republic)
ஆசிரியர்: வரலாற்றறிஞர் வெ.சாமிநாத சர்மா
குறிப்பு: ஆசிரியரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை
நூல் குறிப்பு:
பிளேட்டோவின் கிரேக்க மூல நூலான Plato’s Republic நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் குறிப்பிடத்தக்கன வந்துள்ளன. தமிழில் வந்த ஒரு நூல் இது.
340 பக்கங்களைக் கொண்டது இந்த நூல். நூலின் பிரிவு வகை மிக வித்தியாமாக உள்ளது. ஆரம்பத்தில் நூலாசிரியர் வாசகர்களுக்கு இந்த நூலைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தருகின்றார். அதனைத் தொடர்ந்து பிளேட்டோவும் நானும் என்ற வகையில் தன்னோடு தொடர்பு படுத்திக் கொண்டு தமக்கு இப்பணியில் ஏற்பட்ட நாட்டத்தை விளக்குகின்றார். இதனைத் தொடர்ந்தார் போல பிளேட்டோவின் 10 நூல்கள் ஒவ்வொன்றாக விளக்கம் செய்யப்படுகின்றன.
நூலில் பிளேட்டோவும் நானும் என்ற பகுதியில் ஆசிரியர் இந்த மொழிபெயர்ப்பு செய்த நாட்களை விவரிக்கின்றார். 2ம் உலக்ப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் ஆசிரியர் ரங்கூனில் தமது மொழிபெயர்ப்பைத் தொடங்கிய வேளையில் அங்கிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படுகின்றது. கால் நடையாக அங்கிருந்து புறப்பட்டு வெவ்வேறு ஊர்களின் வழியாகக் கடந்து தமிழகம் வரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரங்கள் அந்தப் பயணத்தின் ஊடே, மிகுந்த சிரமத்துக்கிடையேயான சூழலில் உடல் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் தொடர்ந்து செய்திருக்கின்றார்.
எத்தகைய தீவிரமான ஆர்வம் அவருக்கு இப்பணியில் இருந்தது என்பதை நோக்கும் போது திரு.வெ.சாமிநாத சர்மா அவர்களின் இந்த மொழிபெயர்ப்பு பணிக்கான தமது அர்ப்பணிப்பை புறந்தள்ளி பார்க்க முடியவில்லை.
முதலில் 2 தொகுதிகளாக வெளியிட நினைத்திருந்து பின்னர் இரண்டையும் ஒன்றாக முழு நூலாக்கி தந்திருக்கின்றார் நூலாசிரியர்.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: கோயம்பத்தூரைச் சேர்ந்த சுந்தரராஜன் ஜெயராமன். அவருக்கு நமது நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 401
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: சுந்தரராஜன் ஜெயராமன்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]