Home பல்வேறு THF Announcement: ebooks update: 23/11/2014 *வரலாறு கண்ட கடிதங்கள்*

THF Announcement: ebooks update: 23/11/2014 *வரலாறு கண்ட கடிதங்கள்*

by admin
1 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்:  வரலாறு கண்ட கடிதங்கள்
ஆசிரியர்:  வெ.சாமிநாத சர்மா

நூல் குறிப்பு:  
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழி பெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப்பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும் என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள்.  1895ம் ஆண்டில் பிறந்த இவர் முதலில் அரசுப் பணியில் ஈடுபட்டவரெனினும் திரு.வி.க அவர்களின் குரு-சீடர் போன்ற நட்பின் காரணத்தால் அரசுப் பணியையும் விட்டு தேசபக்தன், நவசக்தி நாளேடுகளில் பணியாற்றினார். 

இந்த நூலைப் பற்றி .. அறிமுகமாகச் சில கருத்துக்களை ஆசிரியர் முன் வைக்கின்றார்.. அவற்றில் ஒன்று..
ஒரு நாட்டின் விடுதலைப்போக்கையோ, குமுகாயத்தின் வாழ்க்கைப் போக்கையோ மாற்றுவதற்குப் பல நேரங்களில் மடல்கள் கரணியமாக அமைவதுண்டு. ஒருவருடைய உள்ளத்தில் ஏற்படுகின்ற உணர்வுகள், எண்ணங்கள், இருவருடைய எண்ணங்களை இணைக்கும் மடல்கள் செயலில் இறங்க துணிந்தவர்களின் மனத்தில் உருவாகியிருக்கும் திட்டங்களை அறிவிக்கும் முன்னோடிகள் மடல்களாகும்..
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.ஜெயராமன்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 405
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.ஜெயராமன்
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

You may also like

1 comment

Innamburan S.Soundararajan November 23, 2014 - 9:15 am

என் முதல் தமிழ் ஆசானின் கடிதங்கள் இன்ரும் என்னை ஊக்குவிக்கின்றன.
நன்றி பல.
இன்னம்பூரான்

Reply

Leave a Comment