Home பல்வேறு THF Announcement: ebooks update: 14/12/2014 *கார்ல் மார்க்ஸ் – முதல் பாகம்*

THF Announcement: ebooks update: 14/12/2014 *கார்ல் மார்க்ஸ் – முதல் பாகம்*

by admin
1 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய   தமிழ் நூல் இணைகின்றது.
நூல்:  கார்ல் மார்க்ஸ் – முதல் பாகம்(முதற் பதிப்பு)
ஆசிரியர்:  வெ.சாமிநாத சர்மா



நூல் குறிப்பு:  
112 பக்கங்கள் கொண்ட நூல் இது. பிறப்பும் படிப்புm, வாழ்க்கை என வரலாற்று நிகழ்வுகளோடு தொடங்குகின்றது நூல்.

வாசகர்களுக்கு நூலாசிரியர் தரும் குறிப்பு..
கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சரித்திரமும் பின்னிக் கொண்டிருக்கின்றன. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் என்ற அறிஞன் கூறுகிற மாதிரி மார்க்ஸுக்கு ஜெர்மனி ஒழுங்கான ஒரு திட்டத்தை வகுக்கக்கூடிய ஆற்றலை அளித்தது. பிரான்ஸ் அவனை ஒரு புரட்சியாளனாக்கியது. இங்கிலாந்து அவனை ஒரு அறிஞனாகச் செய்தது. எனவே இந்த நூலில் மார்க்ஸை மையமாக வைத்துக் கொண்டு அவனுடைய வாழ்க்கையோடு ஒட்டிய ஐரோப்பிய நிகழ்ச்சிகளை ஆங்காங்கே சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சுருக்கிக் கூறியுள்ளேன்.. என்கின்றார் ஆசிரியர்.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.ஜெயராமன்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 409
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.ஜெயராமன்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

You may also like

1 comment

Innamburan S.Soundararajan December 14, 2014 - 10:40 am

இந்த நூலை அது வெளிவந்த ஐந்தாவது வருடம் படித்த பின், அதை படிக்க இன்று தான் தருணம் கிட்டியது

திரு, ஜெயராமனுக்கும் சுபாஷிணிக்கும் நன்றி. ஒரு தகவல். கார்ல் மார்க்ஸ் இங்கிலாந்தில் புகலிடம் நாடியபோது

அவர் விக்டோரியா ராணியை கொல்ல வருகிறார் என்றும், புகலிடம் மறுக்கப்படவேண்டும் என்று ஜெர்மானிய அரசு

கடிதம் எழுதியது. இங்கிலாந்து அதை பொருட்படுத்தாமல், அவருக்குப் புகலிடம் கொடுத்தது.

இன்னம்பூரான்

Reply

Leave a Reply to Innamburan S.Soundararajan Cancel Reply