மண்ணின் குரல்: டிசம்பர் 2014:ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் – திருவாதவூர்

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது. 

வரகுண பாண்டியன்

திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில்,  சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில். இது தனி ஆலயமாகவே  உள்ளது. இக்கோயில் இருக்கும் இடமே மாணிக்கவாசகர்  அவதரித்த பகுதி. 

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் என போற்றப்படுபவர் இவர்
இவர் பாடியவை திருவாசகம், திருக்கோவை. ஆகியவை. சிவபுராணத்தை அறியாத சைவர் இல்லை எனலாம்.

எளிமையான அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில்  நின்ற நிலையில் மாணிக்கவாசகர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. 
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/12/blog-post_30.html
யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=CSW6JDL-e8E&feature=youtu.be
இப்பதிவு ஏறக்குறைய 8  நிமிடங்கள் கொண்டது.
அன்புடன்
சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *