மண்ணின் குரல்: ஏப்ரல் 2015:தென்னாப்பிரிக்காவில் தமிழ்க்கல்வி

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
மாலா லட்சுமணன் – தென்னாப்பிரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் மூன்றாவது சந்ததியைச் சேர்ந்தவர். 180 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருக்கின்றார். முதுகலையும் முடித்து தற்சமயம் முனைவர் பட்ட ஆய்வினை தமிழ் மொழிக்கும் ஆப்பிரிக்க சூலு இன மொழிக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்து வருகின்றார்.
தென்னாப்பிரிக்க இந்தியத்தூதரகம் நடத்தும்  மொழி வகுப்பில் இவர் தமிழாசிரியராக பணிபுரிகின்றார்.
தென்னாப்பிரிக்க இந்திய தூதரகத்தில் ஹிந்தி மொழி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் மொழிக்கு கட்டணம் கட்டியே கற்றுக் கொள்ள வேண்டிய நிலை. பணம் கட்ட வேண்டுமென்பது எங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் இங்கு காட்டப்படும் பாரபட்ஷம் தான் மனதை உறுத்துகின்றது. இது ஒரு மானப்பிரச்சனை என்று குறிப்பிடுகின்றார். 
பேட்டியைக் கேட்டுப் பார்க்கவும்.
இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 
விழியப் பதிவைக் காண:http://video-thf.blogspot.de/2015/04/blog-post.html
யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=3wiscFDD4cE&feature=youtu.be

​மாலா, நான், ப்ரேமி

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *