வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நூறாண்டுகளுக்கு முந்தையதான ஒரு பழம் வைத்திய சாத்திர நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: வயித்தியாநுகூலஜீவரட்சணி முதற்பாகம்
ஆசிரியர்: அங்கமுத்து முதலியார் (நேட்டிவ் டாக்டர்)
பதிப்பு: இராமசாமி நாயுடு – ஸ்ரீலட்சுமி நாராயன விலாச அச்சியந்திரசாலை
ஆண்டு: 1896
நூல் குறிப்பு:
பல்வேறு நோய்களுக்கான வைத்திய முறைகள் செய்யுள் நடையில் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 438
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: அன்றில் கரிகாலன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
2 comments
நேட்டிவ் டாக்டர்அங்கமுத்து முதலியார் 1896ல் கையாண்ட தமிழ் இனிமையாக இருக்கிறது. தற்காலத்தமிழில் உரை விரைவில் வரவேண்டும். மனதளவிலும், உடலளவிலும் என் செரிமானத்துக்கு உதவும் வகைகள் கண்டேன். நமது காளைராஜன் உடனுக்குடன், இதன் அச்சுப்பிரதி எடுத்து காரைக்குடி மூலிகை தளத்திடம் கொடுத்து, இதை நடைமுறைக்குக் கொணர்ந்தால், த.ம. அ. ஒரு பெரிய தொண்டு செய்ததாக அமையும். அத்தருணம் ஏழு வருடங்களுக்கு முன் நான் மின்னாக்கம் செய்து கொடுத்த வைத்திய திறவு கோல் பயன் அளிக்கலாம்.
மேலும் அக்காலம் கபீர்தாஸ் அவர்களின் கீர்த்தனைகள் தமிழில் இருந்திருக்கின்றன. அந்த சகிப்புத்தன்மையை தொலைத்து விட்டோம். சுபாஷிணிக்கு என் பாராட்டுகள்.
அன்புடன்,
இன்னம்பூரான்
மிகச்சிறந்த பணி. இது உண்மையிலேயே பழைமை புரத்தல்தான். பாராட்டுகள்.
அன்புடன்
மதுரபாரதி