Home E-Books THF Announcement: E-books update:31/1/2016 *சுதந்திரத்தின் தேவைகள் யாவை

THF Announcement: E-books update:31/1/2016 *சுதந்திரத்தின் தேவைகள் யாவை

by admin
1 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் அரசியல் வரலாற்று நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:  சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா
நூல் குறிப்பு: 
212 பக்கங்கள் கொண்ட இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. 
முதல் பகுதியில் தேசிய தத்துவமும், 2ம் பகுதியில் ஜனநாயக தத்துவமும், 3ம் பகுதியில் வாழ்க்கைத்தத்துவமும் அலசப்படுகின்றன.
சீன சிந்தனையாளர் சன் யாட் சென்னின் சொற்பொழிவுகளை முதன் மொழியில் இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து கொணர்ந்த பெருமை தமிழ் மொழிக்கே உண்டு. இதனைச் செய்தவர் வெ.சாமிநாத சர்மா அவர்கள்.
ஒரு ஏழை விவசாயி குடும்பத்து மகனான சன் யாட் சென்,  சீன மக்களுக்கு நல்வாழ்வு வரவேண்டி மஞ்சூ ஆதிக்கத்தை எதிர்த்து 18 ஆண்டுகள் போராடியவர். இறுதியில் போராட்டத்தில் வெற்றி கண்டார்.  1912ம் ஆண்டு சீன குடியரசு அமைந்தது. அதன்  முதல் பிரசிடெண்ட் ஆனார். பல முன்னேற்ற நடவடிக்கைகளை சீனாவில் ஏற்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இந்த நூலில் உள்ளவை சன் யாட் சென்னின் சொற்பொழிவுகளின் தமிழாக்கமே.

அரசியல் சித்தாந்ததை விரும்பும் வாச்கர்கள் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 443
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

You may also like

1 comment

Innamburan S.Soundararajan January 31, 2016 - 9:38 am

ஸூங்க்லீ அவர்களை பற்றியும், சுதந்திரத்தின் தன்மைகளை பற்றியும் சர்மாஜீ அளித்த விளக்கங்கள்,தாய்ப்பால் போல என் உடலையும், உள்ளத்தையும் பேணி வளர்த்தன. நான் வாழ்க்கையில் அடைந்த முன்னேற்றங்களுக்கு அவை தான் வித்திட்டன. ஐஏஎஸ் நேர்காணலில் இது பற்றி விவரமாக பேச வேண்டியது இன்றியமையாததாக அமைந்து விட்டது. அப்போது வடநாட்டு அறிஞர்கள் இப்படி ஒரு தமிழறிஞர் இருந்தது பற்றி வியந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி தனக்கு இவரை பற்றி தெரிந்திருக்கவில்லை என்று வெளிப்படையாகக்கூறினார். அவரே பிற்காலம் என்னுடைய தேர்வுக்கு உதவியது என்று மற்றதொரு சம்பாஷணையை குறிப்பிட்டார் என்றாலும், என் கணிப்பில் சர்மாஜீ தான் எனக்கு இது விஷயத்தில் உறுதுணை என்பதில் ஐயம் இல்லை. 1954ல் சைனா சன்யாத் சென் அவர்களையும், சியாங்கே ஷேக் அவர்களையும் உதறி விடும் என்று நான் கூறியது விவாதத்திக்கு வித்திட்டு என்றாலும், என் ஆரூடம் பலித்தது. அதற்கு காரணம் இந்த நூலில் உளது.
இதைப்பதிப்பித்ததற்கு, நான் திரு.ஜெயராமனுக்கும், சுபாஷிணிக்கும் நன்றி கூறுகிறேன்.
இன்னம்பூரான்

Reply

Leave a Comment