மண்ணின் குரல்: ஏப்ரல் 2016: பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் பேரா.முனைவர் தொ.பரமசிவன்

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இவரது ஆய்வுப் படைப்புக்களாக 

 • அழகர் கோயில்
 • பரண்
 • சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்)
 • சமயங்களின் அரசியல்
 • செவ்வி (நேர்காணல்கள்)
 • விடு பூக்கள்
 • உரைகல்
 • இந்துதேசியம்
 • நாள்மலர்கள்
 • அறியப்படாத தமிழகம்
 • பண்பாட்டு அசைவுகள்
 • தெய்வங்களும் சமூக மரபுகளும்
 • தெய்வம் என்பதோர்
 • வழித்தடங்கள்
என்பனவோடு புதிய நூல்களாக இந்த ஆண்டு மேலும் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. 

தமிழ்ச்சமூகம் தொடர்பான பன்முகத்தன்மை கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து நிகழ்த்தி வருபவர்.  இவர் தொல்லியல், மானுடவியல் சமூகவியல், இலக்கியம் என்ற பல்துறைகளில் அறிஞர் என்ற பெருமைக்கும் உரியவர். இந்த நூற்றாண்டின் தமிழ் ஆய்வுலகிற்குக் கிடைத்த சிறந்ததொரு அறிஞர் இவர் என்பது மிகையல்ல.

தமிழ் மரபு அறக்கட்டளை பேரா. தொ.ப அவர்களை 2015ம் ஆண்டின்  ”சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்” என்ற விருதளித்து சிறப்பு செய்தோம். தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர் அளித்த நேர்காணலை இந்த விழியப் பேட்டியில் காணலாம். 
ஏறக்குறைய 59 நிமிட  பேட்டி இது.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2016/04/blog-post.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=j5ttfBFX_xA&feature=youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
குறிப்பு: என்னுடன் உடன் வந்திருந்து பதிவுகளில் உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் மதுமிதா, திருமதி யோகலட்சுமி, பேராசிரியர்.முனைவர் கட்டளை கைலாசம் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

You may also like...

1 Response

 1. பேரா.தொ.பரமசிவம் ஓர் தகவல் களஞ்சியமாக இருக்கிறார். எனவே இதை நிறைவான பேட்டி என்று சொல்ல முடியாது. It is only the tip of the iceberg! அவருடன் ஓரிரு நாளாவது இருந்து ரசிக்க மனது ஆவல் கொள்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *