சித்திரைத் திருநாள் வரவேற்பு – த.ம.அ சிறப்பு வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த நாளில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக அமைவது அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாள்.  இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும் சமூக நீதிக்காவலருமான அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முதன் முறையாக தன் ஐ.நா  தலைமையகத்தில் கொண்டாட்டுகின்றது. 


இந்த இனிய நாளில் தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை வரவேற்பாக சிறப்பு மலர் ஒன்றினை வெளியீடு செய்கின்றோம். 
இந்த வெளியீட்டில் சுவையான படைப்புக்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின்  மின்தமிழ் உறுப்பினர்கள் தமிழ் வாசகர்களுக்காகp  படைத்திருக்கின்றார்கள். சுவாரசியமான படைப்புக்களைக் கொண்டு இந்த மின்னிதழ் உங்களை வந்து சேர்கின்றது.
இந்த சிறப்பிதழில் இடம்பெறும் படைப்புக்களைப் பற்றி ஓரிரு வரிகளாக அறிமுகத்தைத் தருகின்றேன்.
 1. நா.கண்ணனின் துர்முகிக்கான துதி தொடக்கக் கவிதையாக மலர்கின்றது.
 2. உதயனின் கேமரா பிடித்த சித்திரைத்திருவிழா காட்சிகள் இந்தச் சிறப்பிதழின் அட்டைப்படத்தை அலங்கரிப்பதோடு மதுரை சித்திரைத் திருவிழா காட்சிகளில் சிலவற்றை நம் கண் முன்னே கொண்டு வருகின்றன.
 3. திவாகரின் சைத்திரா கதை ஒரு நினைவின் பிரதிபலிப்பாக அமைகின்றது.
 4. இன்னம்பூரானின் மொழியின் வரலாறு எனும் தலைப்பிலான கட்டுரை பல்வேறு காலகட்டங்களில் வெவேறு மொழிகள் பிறந்த விதங்களையும் பேசுகின்றது.
 5. கோ.செங்குட்டுவனின் சன்னியாசியாக மாறிய படைத்தளபதி எனும் கட்டுரை திருமுண்டீச்சுரத்தில் நிகழ்ந்த வரலாற்றைப் பதிகின்றது.
 6. சிங்காநெஞ்சனின் புவிக்குரல் புவியின் வரலாற்றைக் கவிதையாகப் பாடுகின்றது.
 7. ஷைலஜாவின் சாதி இரண்டொழிய எனும் தலைப்பிலான கவிதை அண்மையில் சாதிவெறியினால் வெட்டிக் கொல்லப்பட்ட உடுமைலப்பேட்டை இளைஞனையும், கணவனை இழந்து சித்திரையை மட்டுமல்லாது தன் இன்பத்தை இழந்து வாடும் பெண்ணின் கண்ணீரைப் பாடுகின்றது.
 8. கௌதம சன்னாவின் தந்தை சிவராஜ் கட்டிய மக்கள் விளையாட்டரங்கம் என்ற கட்டுரை பின்னாளில் அது எப்படி நேரு விளையாட்டரங்கமாக மாறியது என்று விளக்குகின்றது.
 9. சிங்காநெஞ்சனின் குடியம்-அதிரம்பாக்கம் – புவியியல் கோணத்தை விவரிக்கின்றது.
 10. ஜெயபாரதனின் கவிதை சித்திரை புத்தாண்டை வரவேற்கின்றது.
 11. பவளசங்கரியின் வைராக்கியம் எனும் தலைப்பில் அமைந்த கட்டுரை மனித மேம்பாட்டை குறித்ததாக அமைகின்றது.
 12. பார்வதி ராமச்சந்திரன் இடும்பிக்கும் ஒரு கோயில் இருக்கின்றது எனச் சொல்லி அதனை விளக்குகின்றார்.
 13. அரிசோனா மகாதேவன் அமெரிக்க ஆற்று மணலில் தங்கம் கிடைத்தது பற்றிய செய்தியைக் கட்டுரையாகச் சொல்கின்றார்.
 14. தேமொழி சித்திரை முழு நிலவு பற்றி இலக்கிய, இயற்கை, அறிவியல் விளக்கங்களைத் தன் கட்டுரையில் தருகின்றார்.
இப்படி, 14 படைப்புக்களுடன் இவ்வாண்டின் சித்திரைத் திருநாள் உங்கள் வாசிப்பிற்காகக் காத்திருக்கின்றது. 
மின்னிதழை வாசிக்க இங்கே செல்க!
சித்திரைத் திருநாளைக் கொண்டாடி  மகிழும் அதே வேளை இந்த உலகில் பாகுபாடற்ற, பிரிவினையற்ற, மனித நேயம் மிகுந்த நட்பும் அன்பும் சூழ்ந்த உறவினை நாம் வளர்த்து மனித குலம் மேண்மையடை தமிழ் மரபு அறக்கட்டளை அனைவரையும் வாழ்த்துகின்றது!
என்றும் அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

6 Responses

 1. கண்ணன் சொன்ன சுழற்சியை இங்கே காண்கிறேன். உதயனும், திவாகரும் கள்ளழகரை தரிசிக்க வாய்ய்பு அளித்தனர். எனக்கு ஒரு கொடுப்பினை உண்டு. உதயனும், திவாகரனும் வைகறையில் சுடர் வீசி என்னை மகிழ்விப்பார்கள். அதுவும், பரிமுகனின் அருளாசியும் கூடக்கிடைத்தது, ஒரு மகாபாக்கியம். சுபாஷிணியின்அசராத உழைப்பு என்னை பொறாமைப்பட வைக்கிறது. தமிழன்னை மனமகிழ்ந்து நாம் யாவரையையும் ஆசீர்வதிக்கிறாள்.
  அன்புடம்,
  இன்னம்பூரான்
  14 04 2016

 2. வாழ்க வளர்க தமிழ் மரபு அறக்கட்டளை

 3. வாழ்க வளர்க தமிழ் மரபு அறக்கட்டளை

 4. வாழ்க வளர்க தமிழ் மரபு அறக்கட்டளை

 5. வாழ்க வளர்க தமிழ் மரபு அறக்கட்டளை

 6. வாழ்க வளர்க தமிழ் மரபு அறக்கட்டளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *