மண்ணின் குரல்: அக்டோபர் 2016: வயல்காத்த ஐயனார் – புரவி எடுப்புத் திருநாள்

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
இந்தப்பதிவில் தமிழக கிராமங்களில் வயல்பகுதிகளில் அமைந்திருக்கின்ற ஏரிக்காத்த ஐயனார் அல்லது வயல்காத்த ஐயனார்  கோயிலைக் காணலாம். 
புரவி எடுப்புத் திருநாள் என்பது ஒரு விவசாயி தன் நிலத்தின் விளைச்சலை போற்றும் வகையில் ஐயனார் சாமிக்கு புரவி செய்து ​தூக்கிக்கொண்டு வந்து இந்த ஐயனார் கோயிலில் வைத்து விட்டு வேண்டிச் செல்லுதல் என்பதாக இருக்கின்றது.

இந்தப் பதிவில் சிவகங்கை மாவட்டத்து மரவன்மங்கலம் எனும் ஊரில் உள்ள இத்தகைய ஒரு கோயிலைக் காண்கின்றோம்.
இந்தப்பதிவில் இக்கோயிலைப்பற்றிய விளக்கம் தருபவர் மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியை முனைவர் மலர்விழி மங்கை. அவருக்கு நம் நன்றி. 
விழியப் பதிவைக் காண:      http://video-thf.blogspot.de/2016/11/blog-post.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=sr3J2mSgVqE&feature=youtu.be 
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *