Home E-Books THF Announcement: E-books update:20/8/2017 *Kindergarten Room – மழலையர் பாடல்கள்

THF Announcement: E-books update:20/8/2017 *Kindergarten Room – மழலையர் பாடல்கள்

by admin
4 comments
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:  Kindergarten Room – மழலையர் பாடல்கள்
ஆசிரியர்:    ராவ் பகதூர் எம்.சி.ராஜா M.L.A., F.M.U. , திருமதி. ரங்கநாயகி அம்மையார்
ஆண்டு: 1930





நூலைப் பற்றி

​தமிழகத்தில் மிக நீண்ட காலமாகப் பாடப்படும் கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு என்கின்ற பாடல் உட்பட, பல மழலையர் பாடல்கள் இன்றும் பள்ளிப் பாடத்திட்டத்தில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அந்தப் பாடல்களை எழுதிய ஆசிரியர் யார் என்பது இது வரை பேசப்படாது இருந்து வந்தது. அந்த மர்மத்துக்கு விடை இதோ.

அந்தப் பாடல்கள் அடங்கிய கிண்டர்கார்டன் ரூம் என்கின்ற தொகுப்பினை எழுதியவர் தமிழகத்தின் மிக முன்னோடியான அரசியல் தலைவர் மற்றும் நீதிக் கட்சி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்,  இந்தியாவில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர், பெருந்தலைவர், எனப்பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற  மயிலை சின்னத்தம்பி ராஜா எனப்பட்ட ராவ் பகதூர் எம்.சி.ராஜா அவர்கள் தான். இவரோடு இணைந்து கல்வியாளர் திருமதி. ரங்கநாயகி அம்மையார் அவர்களும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.

இந்தப் புத்தகம் 1930ம் ஆண்டு முதல் பதிப்பு கண்டது. அப்போது அதன் விலை 8 அணா.  அதற்குப் பிறகு பள்ளி நூல்களிலும் பள்ளிப் பாடப்புத்தக நூல்களிலும், இந்த நூலில் உள்ள பல பாடல்கள்,  மக்களின் வாய்மொழிப் பாடல்களாகவும் பண்பாடாகவும் மாறி விட்டது.  தமிழகம் மட்டுமன்றி தமிழர்கள் உலகின் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றார்களோ, அங்கெல்லாம் இப்பாடல்களைக் கொண்டு சென்றதால், உலகம் முழுவதும் சிறுவர்கள் பயின்று பாடும் பாடல்களாக இன்றும் இவை உள்ளன. 

அந்த வகையில், மிக நீண்ட காலம் மறு பதிப்பு செய்யப்படாத இப்புத்தகம், தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல் வெளியீடாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இந்த நூலைப் பாதுகாத்து வைத்த சென்னையில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்திற்கு எமது நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 464
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக முன்னுரை ஒன்றினையும் எழுதி வழங்கியவர்: திரு.கௌதம சன்னா
அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

You may also like

4 comments

இனியன் துரைசாமி August 22, 2017 - 2:23 am

தமிழ் மரபு அறக்கட்டளைக்கு
வாழ்த்துக்கள்…

பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட வரலாறு தான் இந்த புத்தகம். பள்ளி பாடநூல்களில் இந்த பாடல்கள் பல தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் உருவாகி உள்ளனர். ஆனால் இந்த பாடலை எழுதிய எம்சி. இராஜா அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் மறைத்து விட்டார்கள். ஆனாலும் உண்மையை வெளிப்படுத்திய தமிழ் மரபு அறக்கட்டளைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்..

இனியன்
தமிழ்நாடு.
9942477550

Reply
இனியன் துரைசாமி August 22, 2017 - 2:24 am

தமிழ் மரபு அறக்கட்டளைக்கு
வாழ்த்துக்கள்…

பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட வரலாறு தான் இந்த புத்தகம். பள்ளி பாடநூல்களில் இந்த பாடல்கள் பல தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் உருவாகி உள்ளனர். ஆனால் இந்த பாடலை எழுதிய எம்சி. இராஜா அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் மறைத்து விட்டார்கள். ஆனாலும் உண்மையை வெளிப்படுத்திய தமிழ் மரபு அறக்கட்டளைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்..

இனியன்
தமிழ்நாடு.
9942477550

Reply
murankalari.blogspot.com August 22, 2017 - 2:19 pm

மிக்க நன்றி. நல்ல பணி.வாழ்த்துகள்!

Reply
murankalari.blogspot.com August 22, 2017 - 2:20 pm

மிக்க நன்றி. நல்ல பணி.வாழ்த்துகள்!

Reply

Leave a Reply to இனியன் துரைசாமி Cancel Reply