மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: கரூவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம்

வணக்கம்.
பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட கரூர் பண்டைய சேரர்களின் தலைநகராக விளங்கியது. 
காவிரி நதியும் அமராவதி ஆற்றுப்பகுதிகளையும் உள்ளடக்கிய கரூர் மாவட்டத்தில் ஏராளமான புரதான பொருட்கள் பல்வேறு இடங்களில் இன்னும் புதைந்து கிடப்பதாக வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் கரூவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
Inline image 1
பல கடைகளுக்கு இடையே ஒரு பழமையான கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. காசுகள், கல்வெட்டுகள், புலிகுத்திக்கல், நடுகல்கள், சுடுமண் பொம்மைகள், ஓலைச்சுவடிகள், சிற்பங்கள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கரூரின் சேர, பாண்டிய, பல்லவ, விஜயநகர வரலாற்றைக் குறிப்பிடும் சான்றுகள் நிறைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டிடம் மிக அவசியம். இந்தப் பதிவில்   இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில அரும்பொருட்களைக் கானலாம்.

குறிப்பு: இந்தப் பதிவில் சாலையில் வாகனங்கள் செல்லும் சத்தமும் உள்ளே ஊழியர்களின் பேச்சுச் சத்தமும் இருந்ததால் பதிவினை சரியாகச் செய்ய இயலவில்லை. ஆயினும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களைப் பதியும் வகையில் இந்தப் பதிவு ஓரளவு அமைந்திருக்கின்றது.  12 நிமிட சிறிய விழியப்பதிவு  இது.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2018/02/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=ekxEefHNmBA&feature=youtu.be
இப்பதிவினைச் செய்ய உதவிய கரூர் அரசு மகளிர் கல்லூரி தலைவர் பேராசிரியர்.நடேசன், அவரது மகன் கண்ணன் நடேசன் மற்றும் அவரது நண்பர்களுக்குத்   தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *