Home Video மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள்

மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள்

by admin
0 comment
இன்றைய வரலாற்றுப் பதிவில்  தமிழக தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன்  அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் தமிழக அகழ்வாய்வுப் பணிகள் பற்றிய தகவல்கள் கொண்ட விழியப் பதிவினை வெளியிடுகின்றோம். தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன்  அவர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த விழியப் பதிவில் அவர் நம்முடன் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். அவற்றில்,
  • தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகள்
  • தினப்படி 10 ரூபாய் என்ற சம்பளத்தில் கொற்கை பகுதியில் தாம் அகழ்வாய்வுப் பணியைத் தொடங்கிய அனுபவங்கள்
  • கரூர் பகுதியில் அகழ்வாய்வு – மக்கள் வாழ்விடப் பகுதிகள், தமிழி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள்
  • கரூர் நகரமே சேரர் தலைநகரமாக விளங்கிய வஞ்சி மாநகரம்
  • கொடுமணம் ஆய்வுகள் – பெருங்கற்கால சின்னங்கள்
  • அரிக்கமேடு, மரக்காணம், தருமரி, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகளில் தமது செயல்பாடுகள் – அங்கு கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள்
  • மணக்காணம் என கல்வெட்டில் குறிக்கப்படும் மரக்காணம்
  • பட்டறைபெரும்புதூர் – அத்திரம்பாக்கத்திற்கும் பூண்டிக்கும் அருகில் உள்ள பகுதியில் அகழ்வாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்ட உறைக்கிணறு பற்றிய தகவல்கள்
  • கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த மாளிகைமேடு – சோழர் மாளிகையின் அடித்தளம்
  • இராமநாதபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் இதுவரை விரிவான அகழ்வாய்வுகள்  நடத்தப்படவில்லை. இங்கு விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
  • தொண்மை காட்சியகத்திற்கான தேவை
என அமைகின்றன.
யூடியூபில் காண:   https://youtu.be/-vJf1-kv-mE
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment