2018ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்து வந்த பாதையை மீள்பார்வை செய்வது, வருகின்ற 2019ம் ஆண்டில் நமது பணிகளை நாம் மேலும் செம்மை படுத்தித் தொடர உதவும் எனக் கருதுகின்றேன். இனி தமிழ் மரபு அறக்கட்டளை 2018ம் ஆண்டில் நிறைவேற்றிய பணிகளைப் பற்றிய விபரங்களைக் காண்போம்.
பிரத்தியேக வலைப்பக்கங்கள்
தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கம் புதுப்பிக்கப்பட்டது. அந்த வகையில் கீழ்க்காணும் வலைப்பக்கங்கள் புதுப்பித்து வடிவமைக்கப்பட்டன.
- தகவல் களஞ்சியம் / THF Data Library – இந்தப் பக்கம் புதிய வடிவமைப்பில் வாசிப்போர் எளிமையாக தகவல்களைத் தேடும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதனை http://thfcms.
tamilheritage.org/ எனும் பக்கத்தின் வழியாகக் காணலாம். - குடைவரைக் கோயில்கள் – இந்தப் பக்கம் புதிய வடிவமைப்பில் வாசிப்போர் எளிமையாக தகவல்களைத் தேடும் வகையில் மேலும் புதிய பதிவுகளுடன் வடிவமைக்கப்பட்டது. இதனை http://rockcuttemples.
tamilheritage.org/ எனும் பக்கத்தின் வழியாகக் காணலாம். - தமிழகத்தில் இஸ்லாம் -இந்தப் பக்கம் புதிய வடிவமைப்பில் வாசிப்போர் எளிமையாக தகவல்களைத் தேடும் வகையில் மேலும் புதிய பதிவுகளுடன் வடிவமைக்கப்பட்டது. இதனை http://thf-islamic-tamil.
tamilheritage.org/ எனும் பக்கத்தின் வழியாகக் காணலாம். - தமிழகத்தில் சமணம் – இந்தப் பக்கம் புதிய வடிவமைப்பில் வாசிப்போர் எளிமையாகத் தகவல்களைத் தேடும் வகையில் மேலும் புதிய பதிவுகளுடன் வடிவமைக்கப்பட்டது. இதனை http://jainism.
tamilheritage.org/ எனும் பக்கத்தின் வழியாகக் காணலாம். - த.ம.அ செய்திகள் – இந்தப் பக்கம் புதிய வடிவமைப்பில் வாசிப்போர் எளிமையாக தகவல்களைத் தேடும் வகையில் மேலும் புதிய பதிவுகளுடன் வடிவமைக்கப்பட்டது. இதனை http://thf-news.
tamilheritage.org/ எனும் பக்கத்தின் வழியாகக் காணலாம்.
இவ்வாண்டு மேலும் புதிதாக மூன்று பிரத்தியேகப் பக்கங்கள் உருவாக்கப்பட்டு தகவல்கள் சேகரித்து வெளியிடப்பட்டன. அவை
- கீழடி அகழ்வாய்வு பற்றிய செய்திகள் – இந்தப் பக்கம் கீழடி தொடர்பான ஆய்வுகளை மையப்படுத்தும் தகவல்களை உள்ளடக்கிய சிறப்புப் பக்கம். இதனை http://keezhadi.
tamilheritage.co.in/ எனும் பக்கத்தின் வழியாகக் காணலாம். - இலங்கை தமிழ் மரபுகள் – இந்தப் பக்கம் இலங்கை தமிழ் மரபுரிமை சார்ந்த தகவல்களைப் பதிவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்புப் பக்கம். இதனை http://rockcuttemples.
tamilheritage.org/ எனும் பக்கத்தின் வழியாகக் காணலாம். - தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் – தமிழர் மரபுரிமை விளையாட்டுக்களைப் பற்றிய தகவல் அடங்கிய சிறப்புப் பக்கம் இதனை http://thfcms.
tamilheritage.org/category/ games/ எனும் பக்கத்தின் வழியாகக் காணலாம்.
மேலும்,
வரலாறு கேட்போம்…வலையொலி வழி என்ற தலைப்பில் ஒலிப்பதிவுகளின் வழி கட்டுரைகளின் வாசிப்புக்களைக் கேட்ககூடிய வகையில் ஒரு வலைப்பக்கம் கடந்த ஆண்டு வெளியிட்டோம். 30க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவு கட்டுரைகளும், உரைகளும் இப்பகுதியில் தற்சமயம் இணைக்கப்பட்டுள்ளன. https:// thf-podcast.blogspot.de/ என்ற முகவரியில் இப்பக்கத்தைக் காணலாம்.
*பல்கலைக்கழக, கல்லூரி நிகழ்வுகள்*
இவ்வாண்டு தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகத்தின் கல்லூரிகளுடன் இணைந்து மூன்று பன்னாட்டுக் கருத்தரங்கங்களை நிகழ்த்தியது.
- அறச்சலூர் நவரசம் கல்லூரி
- குமாரபாளையம், எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி
- நாமக்கல் செல்வம் கல்லூரி
மேலும், இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் திருவண்ணாமலை அரசு கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையம் தொடங்கப்பட்டது.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியுடன் இவ்வாண்டு இணைந்த வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் கைத்தறி நெசவுக்கலையை வளர்க்கும் வகையிலான விழிப்புணர்ச்சி நாள் நிகழ்வினை அக்டோபர் மாதம் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது.
*அமைப்புக்கள் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்*
இவ்வாண்டு கீழ்க்காணும் தமிழக கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி
- சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி
- மதுரை செந்தமிழ்க்கல்லூரி
*பள்ளி அருங்காட்சியகங்கள்*
சென்ற ஆண்டில் தமிழகத்தின் நான்கு பள்ளிகளில் அருங்காட்சியகங்கள் தொடங்கினோம். அதில் மதுரை சங்கரலிங்காபுரம் ஆதி திராவிடர் பள்ளியின் மாணவர் மரபு மையத்தினர் இவ்வாண்டும் மரக்கன்றுகளை நடுதல், விதைப் பந்து தூவுதல் ஆகிய நடவடிக்கைகளை நிகழ்த்தினர்.
*கைத்தறி நெசவுக்கலை விழிப்புணர்வு*
அமெரிக்காவின் டல்லாஸ் மாநிலத்தில் ஜூலை மாதம் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆண்டு விழாவில் தமிழ் மரபு அறக்கட்டளை Traditional India அமைப்புடன் இனைந்து கைத்தறி நெசவுக்கலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக சென்னை எத்திராஜ் கல்லூரியிலும் இதே பொருளில் அக்டோபர் மாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
*விழியப் பதிவு (வீடியோ) வெளியீடு*
கல்வெட்டுக்கள், வாழ்வியல், ஆலயச் சிற்பங்கள், பேட்டிகள், என ஏறக்குறைய 30க்கும் குறையாத வீடியோ பதிவுகள் இவ்வாண்டு புதிதாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுரிமை விழியப் பதிவு வெளியீட்டில் இணைந்திருக்கின்றன. இவையனைத்தையும் http://video- thf.blogspot.com/ என்ற பக்கத்திற்குச் சென்று காணலாம்.
*மின்தமிழ் மேடை காலாண்டிதழ் வெளியீடு*
2018ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் 4 காலாண்டிதழ்கள் வெளியீடு கண்டன.
- ஜனவரி 2018
- ஏப்ரல் 2018
- ஜூலை 2018
- அக்டோபர் 2018
ஆகிய மாதங்களில் வெளியிடப்பட்ட இந்த காலாண்டிதழ்கள் கூகள்புக்ஸ் இணையத்தளத்திலும் இலவசமாகக் கிடைக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை கூகள்புக்ஸ் இணையதளத்தில் நேரடியாகவும் https://books. google.com/books?id= OR2xDgAAQBAJ காணலாம். அல்லது http://mintamilmedai. tamilheritage.org/wp/ என்ற பக்கத்திலிருந்தும் காணலாம்.
*அனைத்துலக நிகழ்வுகள்*
தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில் இவ்வாண்டு அனைத்துலக நிகழ்வுகள் சிலவற்றில் கலந்து கொண்டோம். அந்த வகையில்:
- மலேசியாவின் பினாங்கு மாநில அரசுடன் இணைந்த வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுப்போம் என்ற நிகழ்ச்சியை நடத்தினோம்.
- அமெரிக்காவின் டல்லாஸ் மாநிலத்திலும், வாஷிங்கடன் டிசி, மேரிலேண்ட் தமிழ்ச்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த சில நிகழ்வுகளில் நிகழ்ந்த தமிழ் நிகழ்வுகளிலும் தமிழ் மரபு அறக்கட்டளை பங்கு கொண்டது
- மலேசியாவில் கோலாலம்பூரில் மார்ச் மாதம் நடைபெற்ற உலக ஐயை மாநாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளை பங்கு கொண்டது.
- நோர்வோ தலைநகர் ஓஸ்லோவில் நோர்வே தமிழ்ச்சங்கத்துடன் ஒரு கலந்துரையாடலில் தமிழ் மரபு அறக்கட்டளை பங்கு கொண்டது.
- கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளை பங்கு கொண்டது.
- இந்தியாவின் ஒடிசாவில் பௌத்தம் தொடர்பான கள ஆய்வுகள்
- இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கண்டி தமிழ்ச்சங்க நிகழ்வுகள்
- தமிழகத்தில் கல்லூரி நிகழ்வுகள்
- மதுரை, டோக் பெருமாட்டி கல்லூரி
- தாம்பரம் மருத்துவக் கல்லூரி அனைத்துலக உடல்கூறு இயல் கருத்தரங்கம்
- கோவை,கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம்
*நாட்டார் வழக்காற்றியல்*
இவ்வாண்டு தமிழர் மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுக்கும் வகையில் அக்டோபர் மாதம் சென்னையில் ஒரு கருத்தரங்கையும் ஆரணியில் கலைஞர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியினையும் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்த்தினோம்.
*ஓலைச்சுவடி மின்னாக்கப் பணிகள்*
ஜெர்மனி நாட்டின் ஹாலே நகரில் அமைந்திருக்கும் ஃப்ராங்க கல்விக்கூடத்தின் அரிய ஆவணங்கள் பகுதியில் பாதுகாக்கப்படும் தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் மற்றும் காகித ஆவணங்கள் பற்றிய கள ஆய்வு இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான ஆய்வுக்கட்டுரையும் விழியப் பதிவுகளும் வெளியிடப்பட்டன.
*சமூக வலைத்தளங்களில் தமிழ் மரபு அறக்கட்டளை*
- பேஸ்புக் பக்கங்களில்
- Tamil Heritage Foundation
- THF Student Heritage Network
- Tamil Heritage Foundation Research – Korea and India
என்ற பக்கங்களின் வழி தமிழ் மரபு அறக்கட்டளையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
- மின்தமிழ் மடலாடற் குழுமம் https://groups.google.
com/forum/#!forum/minTamil என் ற வலைப்பக்கத்தில் இயங்குகின்றது. - தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கம் – http://www.tamilheritage.
org/ என்ற பக்கத்தில் இயங்குகின்றது. - மரபு விக்கி – http://www.heritagewiki.org/
பக்கத்தில் ஆய்வுக் கட்டுரைகளுக்கான பகுதியாக இயங்குகின்றது.
*பழம் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடி வெளியீடு*
இவ்வாண்டு மின்னூல்கள் சேகரத்தில் மேலும் சில அரிய பழம் தமிழ் நூல்களும் தமிழ்ப்பொழில் மின்சஞ்சிகையும் இணைக்கப்பட்டன. இவற்றை http://www. tamilheritage.org/old/text/ ebook/ebook.html என்ற பக்கத்தின் வழியாகவும் http:// thfreferencelibrary.blogspot. de/ மரபு நூலகம் வலைப்பக்கத்தின் வழியாகவும் கண்டு வாசிக்கலாம்.
*புதிய கிளை – இலங்கை*
இவ்வாண்டு தமிழ் மரபு அறக்கட்டளை மேலும் விரிவாக்கம் கண்டது. இலங்கையின் யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம் ஆகிய பகுதிகளுக்கு களப்பணி மேற்கொண்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ மரபு அறக்கட்டளையின் இலங்கை கிலை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கப்பட்டது.
வருகின்ற 2019ம் ஆண்டில் இப்பணிகள் தொடரும்.
*தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டு இணைந்து செயல்பட்டு வரும் அனைத்து உலகளாவிய நண்பர்களுக்கும் எமது நன்றியையும் நல்வாழ்த்துக்களையும் பதிகின்றோம்.!
தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் உலகளாவிய நல் நெஞ்சங்களுக்கு எமது குழுவினரின் மனமார்ந்த நன்றி!*
அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த 2019 ஆங்கிலப் புத்தாண்டு வாழ் த்துக்கள்!!
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை, ஜெர்மனி