திருவள்ளுவர் மற்றும் வீரராகுல பௌத்த விகார்

திருவள்ளுவர் பற்றிய வரலாற்றுக் கதைகளாகச் சில புனைகதைகள் உலவுகின்றன. திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய முற்படும் போது அதற்கு வரலாற்றுச் சான்றுகளை முன் வைத்து ஆய்வுகளை அலச வேண்டிய தேவை உள்ளது. இதனை இந்தப் பதிவில் விளக்குகின்றார் ஆய்வாளர் திரு.கௌதம சன்னா.

திருவள்ளுவர் எங்கு பிறந்தார் என்பதற்கான ஆதாரம், களப்பணியின் மூலம் தாம்சேகரித்த தகவல்களின் வழி திருவள்ளுவர் பிறந்த வாழ்ந்த இடத்தைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துபவர் அயோத்திதாசப் பண்டிதர்.  அதன் அடிப்படையில் திருவள்ளுவரின் காலம், அவரது வாழ்க்கை பின்புலம், அவரது மறைவு உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் அலசுகின்றது இப்பதிவு.

அயோத்திதாசரின் தாத்தாவிடம் இருந்த திருக்குறள் மூலச்சுவடி F.W.எல்லிஸிடம் சென்று பின்னர் அச்சுபதிப்பு கண்டது.  திருவள்ளுவரின் வரலாறு கூறும் திருவள்ளுவமாலை எனும் நூலில்   இடைச்சேர்க்கைகள் இணைக்கப்பட்டதால் பல புராணக்கதைகளாக அவரது வரலாறு திரிக்கப்பட்டது.

திருவள்ளூரில் உள்ள வீரராகவபெருமாள் கோயில், வீரராகுல விகார் எனும் பௌத்த ஆலயம் என்ற தகவல்கள்.. இப்படி பல செய்திகளோடு வருகின்றது இப்பதிவு.

யூடியூபில் காண:    https://youtu.be/OvMov4BqPYk

அன்புடன்

முனைவர்.சுபாஷிணி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *