Home Events கைத்தறி அணிவோம்

கைத்தறி அணிவோம்

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளையும் டிரெடிஷனல் இந்தியா அமைப்பும் இணைந்து, வட அமெரிக்க தமிழ்ச் சங்க கூட்டமைப்பு ஆண்டு விழா நிகழ்வில் “கைத்தறி அணிவோம்” என்ற பொருளில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றோம். இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்தாய் வடிவத்துடன் பிரத்தியேகமாக சேலைகளை உருவாக்கியுள்ளோம். அதில் ஒரு சேலையை இங்கே புகைப்படத்தில் காணலாம். தோழர் சுபா அபர்ணா அவர்கள் இந்தச் சேலையை அணிந்து புகைப்படத்தில் காட்சியளிக்கின்றார்.

 

தமிழகமெங்கும் பல ஊர்களில் நெசவுத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை இன்று மிகப் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. மிக நேர்த்தியான வடிவங்களைத் தறியில் போட்டு தங்கள் உழைப்பைச் செலுத்தி நெசவாளர்கள் உருவாக்கித் தருகின்ற சேலைகளையும் ஏனைய துணி வகைகளையும் போற்றுவது நமது கடமை.

 

இவ்வாண்டும் நெசவாளர்களைப் போற்றுவதற்கான ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதில் மகிழ்கிறோம். வருகின்ற ஜூலை 4 தொடங்கி 7 தேதி வரை அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறுகின்ற விழாவில் இந்த சேலையுடன் நெசவாளர்களின் உழைப்பில் உருவாக்கிய சிறந்த சேலைகளையும் நேரில் பார்த்து நீங்கள் வாங்கி மகிழலாம்.

 

You may also like

Leave a Comment