ரகுநாத கிழவன் சேதுபதியின் மனைவி காதலி நாச்சியார் என்பவருடைய செப்பேடு இது. கி.பி.1709ல் எழுதப்பட்டது. இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம் ஆகும். இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும் இந்த மடத்தை இராமநாதபுரம் மன்னர் கிழவன் ரெகுநாத சேதுபதி அவர்கள் இடையன்வயல் அம்பலம் அவர்களுக்குத் தானமாக வழங்கியுள்ளார். இதற்கானச் செப்புப் பட்டயம் தான் இது.
இதில் என்ன செய்தி இருக்கின்றது எனத் தெரியாமல் யாரோ மந்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள் என இவர்கள் மாமியார் பழைய வியாபாரிகள் சங்கத்தில் தூக்கிப் போட போன போது இதில் ஏதேனும் முக்கியச் செய்தி இருக்கும் பத்திரப்படுத்தலாம் என எடுத்து வைத்திருக்கின்றார். இவரது மாமியாரோ இது ஏதோ சொத்து விபரங்களைச் சொல்கின்றதோ என சந்தேகத்தில் இவருக்கு வாசிக்கவும் தரவில்லையாம். மாமியாரிடமிருந்து இதனை பெற்று வாசிப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகளை இவர் விவரிப்பது கேட்பவர்களுக்கு ஒரு சுவாரசியமான கதையாக இருக்கும்.
எப்படி தனது குடும்பத்திலேயே தடைகளைத் தாண்டி இந்தச் செப்பேட்டை வாசித்து முடித்தார். ஒரு வருட காலம் இந்தச் செப்பேட்டை வாசிக்க அவர் செய்த முயற்சிகள், ஏற்பட்ட தடைகள், கிழவன் சேதுபதி இறந்த போது அவரது மனைவியர் 47 பேரும் அவரது இறந்த உடலைச் சுற்றி வந்து நெருப்பில் விழுந்து உடன்கட்டை ஏறியிருக்கின்றனர். அவர்களில் ஒரு மனைவி சாக விருப்பம் இல்லாமல் தப்பிக்க முயன்றும் அவரையும் காவலாளிகள் நெருப்பில் தூக்கிப் போட்டிருக்கின்றனர். இப்படி பல சுவாரசியமான செய்திகளை இந்தப் பேட்டியில் சொல்கிறார்.
இந்தப் பதிவில் சொல்லப்படுவது போல நம்மில் பலரது வீடுகளில் உள்ள பழைய இரும்புப் பெட்டிகளிலும் குடும்ப பாரம்பரிய பைகளிலும் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம். எல்லாமே சொத்து விபரங்கள் தான் என நினைத்து யாருக்கும் காட்டாமல் வைத்திருப்பதை விட்டு பெச்சேடுகள் வாசிப்போரை அணுகி அறிந்தால் அவற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம் அல்லவா.
ஒலிப்பதிவை கேட்க – https://voiceofthf.blogspot.com/2019/08/blog-post.html
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
1 comment
தங்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது … மிக்க மகிழ்ச்சி .. தாங்கள் தற்போது வெளியிட்ட “ஐப்பசி மாத சாமிநாதன் டைரி ” போலவே அணைத்து ஓலை சுவடிகளின் படங்களை வெளியிட்டால் என் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்…. நங்கள் தமிழ் எழுத்துக்களை “மெஷின் லேர்னிங் ” டெக்னாலஜி மூலம் தானியங்கியாக புரிந்து தற்போதய எழுத்துக்களாக மாற்ற ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம் . எங்களுக்கு உங்களின் சேவை மிகுந்த உதவியாக உள்ளது. நீங்கள் ஓலை சுவடிகளின் புகைப்படங்களை வெளியிட்டால் அது பேருதவியாக இருக்கும்…. தங்களின் உன்னத பணி தொடர எங்களின் வாழ்த்துக்கள்.