தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஓலைச்சுவடி நூல் “பாதிரியார் சீகன்பால்கின் உதவியாளர் சாமிநாதன் ஐப்பசி மாதத்தில் எழுதிய நாட்குறிப்பு” என்ற சுவடி மின்னூல் இணைகின்றது.
நூல் குறிப்பு:
சுவடி: ஐப்பசி மாதத்தில் எழுதிய நாட்குறிப்பு ஆசிரியர்: பாதிரியார் சீகன்பால்கின் உதவியாளர் சாமிநாதன்
எழுதப்பட்ட ஆண்டு: கி.பி. 1706 லிருந்து 1730 க்கு இடைப்பட்ட காலம்காப்பகத்தில் இணைக்கப்பட்ட ஆண்டு: 1742சுவடி பாதுகப்பகம் : கோப்பன்ஹாகன் அரச நூலகம், கோப்பன்ஹாகன், டென்மார்க்.
சுவடியைப் பற்றி:கி.பி.1620ம் ஆண்டில் டானிஷ் கிழக்கிந்திய கம்பெனி தமிழகத்தின் தரங்கம்பாடியில் குத்தகைக்குத் தரங்கம்பாடியைப் பெற்று கோட்டை ஒன்றை கட்டி தமது வர்த்தகத்தைத் தொடங்கினர். கி.பி.1706ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து பாதிரியார் சீகன்பால்க் தரங்கம்பாடிக்குக் கடல்வழி பயணம் செய்து வந்து சேர்கின்றார். அங்கு அவர் தமிழ் மொழியை தீவிரமாகக் கற்க முயற்சிக்கும் வேளையில் அவருக்கு உதவியாளர்களாக அழகப்பா, சாமிநாதன் போன்றோர் அமைகின்றனர்.
தமிழ் நாட்டில் தினம் தங்களது அனுபவத்தை டைரியில் குறித்து வைக்க வேண்டும் என்ற ஐரோப்பிய சமய மையத்தின் கட்டளைப்படி தங்களது தினப்படி அனுபவங்களை பனை ஓலைகளில் பாதிரிமார்கள் குறித்துவைக்கின்றனர். முதலில் பனை ஓலைகளில் எழுதும் திறன் இல்லாததால் உதவியாளர்களை எழுத்தர்களாக பணிக்கு அமர்த்தி தங்கள் ஆவணங்களை உருவாக்கினர். அத்தகைய நாட்குறிப்பு ஆவணங்களில் ஒன்று இது.
11 ஓலைகளில் 22 பக்கங்களாக இந்த பனை ஓலைச்சுவடி அமைந்துள்ளது. ஐப்பசி மாதத்தில் நிகழ்ந்தவற்றை குறிப்பிட்டுள்ள ஆவணம் எனக் கருதலாம். இது வரை வெளியிடப்படாத, வாசிக்கப்படாத ஒரு சுவடி நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோப்பன்ஹாகனில் உள்ள அரச நூலகத்தில் (Royal Library of Copenhagen) மின்னாக்கம் செய்த ஏறக்குறைய 1800 ஓலைகளில் இந்த நூலும் அடங்கும்.
மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி
நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
[www.tamilheritage.org]
4 comments
I stand in awe and wonder to know about this rare find.
Bowing my head in acknowledgement.
Hi mam .. I love your work . You are amazing . Wish I could meet u in person .
Thanks
தங்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது … மிக்க மகிழ்ச்சி .. தாங்கள் தற்போது வெளியிட்ட “ஐப்பசி மாத சாமிநாதன் டைரி ” போலவே அணைத்து ஓலை சுவடிகளின் படங்களை வெளியிட்டால் என் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்…. நங்கள் தமிழ் எழுத்துக்களை “மெஷின் லேர்னிங் ” டெக்னாலஜி மூலம் தானியங்கியாக புரிந்து தற்போதய எழுத்துக்களாக மாற்ற ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம் . எங்களுக்கு உங்களின் சேவை மிகுந்த உதவியாக உள்ளது. நீங்கள் ஓலை சுவடிகளின் புகைப்படங்களை வெளியிட்டால் அது பேருதவியாக இருக்கும்…. தங்களின் உன்னத பணி தொடர எங்களின் வாழ்த்துக்கள்.