திருவள்ளுவர் சிலை திறப்பு விழா சிறப்பு மலருக்காக கட்டுரைகள்

ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா சிறப்பு மலருக்காகத் திருக்குறளின் சிறப்பு கூறும் இலக்கியக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றது

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும், தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பிய கிளையும் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவ  திட்டமிடப்பட்டுள்ளது. 
டிசம்பர் மாதம் 4ம் தேதி இந்த மாபெரும் நிகழ்ச்சி பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் தலைநகரான ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் இனிதே நடந்து கொண்டிருக்கின்றன. 
இதன் ஒரு கட்டமாக, திருக்குறளின்  சிறப்பினைப் போற்றும் விதமாக, குறள்நெறி, பல்துறைகளிலும் குறள்  தரும் வழிகாட்டல்கள், தமிழிலக்கியத்தில் குறளின் தனிப் பெரும் சிறப்பிடம் எனத் திருக்குறள் தொடர்பான இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய  விழாமலர்  ஒன்று வெளியிட முடிவாகியுள்ளது. அதற்காகத் திருக்குறள் தொடர்பான இலக்கியக் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

 
கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோருக்கு உதவும் குறிப்புகள்:

1. கட்டுரை (மற்றும் கட்டுரையின் தலைப்பு, ஆசிரியரின் பெயர் மற்றும் பட்டங்கள், ஆசிரியரின் தொடர்பு தகவல், சார்ந்துள்ள பின்புலம், கட்டுரைக்கு உதவிய சான்றுகள் எனக் கட்டுரை தொடர்பான அனைத்தும் உள்ளடக்கிய கட்டுரையின் அளவு)  குறைந்தது 700 சொற்களுடையதாகவும், அதிகப்படியாக  850 சொற்களுக்கு  மிகாமலும்  இருக்க வேண்டும்.  
2. கட்டுரை  txt / doc/ docx  கோப்பாக, ஒருங்குறியில் மட்டுமே இருக்க வேண்டும்.  
3. கட்டுரை தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் மட்டுமே இருக்க வேண்டும். 
4. கட்டுரை  அனுப்புவதற்கான இறுதி நாள் அக்டோபர் 15, 2019. 
5. அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: mythforg@google.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *