தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மைய விதைகள் நடுவது மற்றும் நூலகம் திறப்பு விழா

மதுரை சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மைய மாணவர்களின் 2000 விதைகள் நடுவது மற்றும் நூலகம் திறப்பு விழா. 


ஆசிரியர் சகோதரர் பாலச்சந்திரன் முத்துசாமி அவரது குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சிக்குச் சிறப்புரையாற்ற வந்திருந்த எங்களை வரவேற்று தங்கள் அன்பினால் எங்கள் மனம் குளிர வைத்தார்கள். 


எழுத்தாளர் கௌதம சன்னா தலைமையில் எவிடன்ஸ் திரு. கதிர் அவர்கள் நூலகத்தைத் திறந்து வைத்தார்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷிணி உரையாற்றினார். 


மாணவர்கள் ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட மூலிகைகள் தாவரங்களைக் காட்சிப்படுத்தி இருந்தார்கள் 2000 விதைகள் நடப்பட்டன. பள்ளி நூலகம் திறந்து வைக்கப்பட்டது இதையே மழைச்சாரல் நிகழ்ச்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக இயற்கை இந்த நிகழ்ச்சியை வாழ்த்துக் கூறுவது போல அமைந்தது.

ஆசிரியர் திரு.பாலச்சந்தர்  அவர்கள் சங்கரலிங்கபுரம் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த 2000 விதைகள் நடுதல் மற்றும் நூலக திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை இறுதி நேர மாற்றங்களினால் வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் திறந்து வைத்தார்கள். 


தலைமையாசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  சங்கரலிங்கபுரம் பெற்றோர்கள் மாணவர்கள் இளைஞர்கள் எனத் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். நூலகத்திற்கு இதுவரை 500க்கும் மேற்பட்ட நூல்கள் பொதுமக்களிடம் இருந்து வந்திருக்கின்றன.  இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி முடித்த ஆசிரியர் திரு.பாலச்சந்தர்   அவர்களுக்கு நமது பாராட்டுக்கள். 


இத்தகைய முயற்சிகள் எங்கோ ஒரு மூலையில் கிராமத்தில் வாழ்கின்ற குழந்தைகளுக்கு வெளிச்சம் தரும் நிகழ்ச்சிகளாக அமைந்துவிடுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தன்னலம் கருதா பாலச்சந்தர் போன்ற ஆசிரியர்களால் பல குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப்படுகின்றது. அதற்கு நாம் நமது தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *