Home Events தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019

தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019

by admin
4 comments

140 மாணவர்கள்.
தமிழகத்தின் கொள்ளிடம், திருச்சி, பாபநாசம், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை கோவை, சேலம், விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, செஞ்சி, கும்பகோணம், திருவாரூர், தஞ்சாவூர், சென்னை, நாகர்கோவில் எனப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளா மாநிலத்திலிருந்தும் மலேசியா, கனடா நாட்டிலிருந்தும் என ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர் வரலாற்று ஆர்வலர்கள்.

இரண்டு நாட்கள் வரலாற்றுச் சிந்தனையிலேயே மாணவர்கள் அனைவரது சிந்தனையும் ஒருமித்து இருந்தது. பயிற்சிக்குப் பிறகு 140 பேர் தமிழி கல்வெட்டுக்களை வாசிக்கவும், எழுதவும், புரிந்து கொள்ளவும் திறன் பெற்றிருக்கின்றார்கள். இவர்கள் பல்வேறு வயது எல்லைக்குள் இருந்தாலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது தமிழி கல்வெட்டுக்களை அறிந்து கொள்ளவேண்டும், தொல் தமிழ் எழுத்தான தமிழி எழுத்தை வாசிக்கவும் எழுதவும் பயிற்சி பெற வேண்டும் என்ற ஆர்வம் தான்.

இரண்டு நாட்களும் இப்பயிற்சிப் பட்டறையில் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் டாக்டர்.பத்மாவதி, டாக்டர்.மார்க்சிய காந்தி, டாக்டர்.சசிகலா ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. தொடர்ந்து வரலாற்று விழிப்புணர்வை இவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்ச்சிகளின் வழி வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 140 பேர் தமிழி எழுத்துருக்களை வாசிக்கச் செய்த முயற்சியில் இவர்களது பங்கு மிகப் பெரிது. இந்த மூவரின் ஒத்துழைப்பு தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு பலம் சேர்க்கின்றது.

முதல் நாள் நிகழ்வில் சிறப்புரையாற்றித் தொடக்கி வைத்த மத்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களது உரை வந்திருந்த அனைவரது கவனத்தையும் வரலாற்றுச் சிந்தனைக்குள் அழைத்துச் சென்று இப்பயிற்சியின் நோக்கத்திற்கு உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நீண்ட உரை, கேள்வி பதில்கள் என்று மட்டுமல்லாது எல்லாரது கேள்விகளுக்கும் புன்னகையோடு பதிலளித்து மதியம் வரை நீண்ட நேரம் நிகழ்ச்சியில் கலந்து சென்ற இவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி.

இரண்டாம் நாள் காலை சிறப்புரையாக சீரிய பல கருத்துக்களை முன் வைத்தார் டாக்டர்.ராஜவேலு. தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி, தமிழியிலிருந்து தான் அசோகன் பிராமி உருவாக்கம் பெற்றது, தமிழ் பிராமி அல்ல -தமிழி என நீண்டதொரு நல்ல உரையை வணங்கி புத்துணர்ச்சியூட்டிய இவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி.

நிறைவு விழாவில் சிந்து சமவெளி ஆய்வுகளையும், சங்கத்தமிழ் செய்யுட்கள் காட்டும் தமிழர் பண்பாடு மற்றும் வாழ்வியல், ஊர்ப் பெயர் ஆய்வு என அனைவரையும் தனது பேச்சினால் ஈர்த்த திரு.பாலகிருஷ்ணன் இஆப அவர்களுக்கு நன்றி. நீண்ட நேரம், பயிற்சி பெற்ற அனைவருக்கும் தனது கரங்களால் சான்றிதழ் வழங்கி எல்லோரது மனதிலும் நீங்கா இடம் பெற்ற இவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி.

தமிழ்க்கல்விக்கழக வளாகத்தை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கி உதவிய தமிழ்க்கல்விக்கழக வளாக நிர்வாகத்திற்கும், உதவிய ஊழியர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி.

ஒரு திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்காக உழைக்கும் ஒவ்வொருவரது செயல்பாடுகளும் அவ்வெற்றிக்குக் காரணமாகின்றது. அந்த வகையில் இந்தத் தமிழி கல்வெட்டு பயிற்சிப் பட்டறை இன்று வெற்றியடைந்திருக்கின்றதென்றால் இதற்காக இணைந்து செயல்பட்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவினர் பாராட்டுதலுக்குரியோர். குறிப்பாக இந்தக் கல்வெட்டுப் பயிற்சியை முன்னின்று செயல்படுத்திய கதிரவன், செழியன், விவேக், குமரகுருபரன், சிவரஞ்சனி, திருப்பூர் மணிவண்ணன், கவியாழி கண்ணதாசன், மற்றும் அறிவிப்பு தயாரிப்பில் உதவிய மாரிராஜன், புகைப்பட உதவி நரேஷ் ஆகியோருடன் குழுவினருக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கி உதவிய திரு.காந்தி, திரு.கௌதம சன்னா, டாக்டர்.தேமொழி ஆகியோருக்கும் ஏனைய பல்வேறு வகையில் உதவிய நண்பர்களுக்கும் எனது தனிப்பட்ட நன்றியைப் பகிர்கிறேன்.

வரலாற்றை உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல் அறிவுப்பூர்வமாகவும், ஆய்வுப்பூர்வமாகவும் அறிந்து கொள்வோம்.

பயிற்சியில் கலந்துகொண்டு தமிழி எழுத்துக்களைப் பயின்ற அனைத்து வரலாற்று ஆர்வலர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அன்புடன்
டாக்டர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு

குறிப்பு:
தமிழ் மரபு அறக்கட்டளையின் அடுத்த கல்வெட்டுப் பயிற்சி மதுரையில் நடைபெறும். அதன் விபரங்கள் கீழ்வருமாறு.

கல்வெட்டுப் பயிற்சிப் பட்டறை:
வட்டெழுத்து – எழுத்தறிதல், எழுதுதல், வாசித்தல்
நாள்: 28-29, டிசம்பர் 2019 (சனி & ஞாயிறு)
இடம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

மேலும் பயிலரங்க நிகழ்ச்சியின் படங்கள்:

முதல் நாள்:

இரண்டாம் நாள்:

You may also like

4 comments

முனைவர் ம. ஷீலாஸ்ரீநிவாசன் September 30, 2019 - 4:25 am

உண்மையிலேயே மிக சிறப்பான ,பயனுள்ள, நல்ல பயிற்சி.தமிழ் மரபு அறக்கட்டளையினருக்கு மிக்க நன்றி.
ம.ஷீலா ஸ்ரீநிவாசன்.

Reply
RaSu Prakasam September 30, 2019 - 7:34 am

அரிதினும் அரிதான நிகழ்வு!

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ் மரபு அறக்கட்டளைக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றியும்.

Reply
Sengai Podhuvan September 30, 2019 - 5:59 pm

பயனுள்ள பாடம்
பயிற்றுநரையும்
பயனடைந்தவர்களையும்
பாராட்டி மகிழ்கிறேன்

Reply
9963028885 October 5, 2019 - 1:50 am

This is great effort. How to enroll for next workshop in December ’19

Reply

Leave a Comment