
THF Heritage Video Release Announcement
https://youtu.be/rle1Fog-I9Q
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி வெளியீடு.
பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthro pology), இனவரைவியல் (Ethnography) ஆய்வுகள் மூலம் தமிழ்ச் சமூக வாழ்வியல்மீது புதிய பார்வையைத் தந்தவர் மானுடவியல் பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள்.
இவரது பண்பாட்டு ஆய்வுகள் தமிழர்களின் தொன்மங்கள், நாட்டார் தெய்வங்கள், சமூக மரபுகள் என மனித வாசிப்பை அடிப்படையாக வைத்து விரிந்ததில் ‘அழகர் கோயில்’, ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘உரைகல்’ போன்ற நூல்கள் மலர்ந்தன.
முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்தும், தொல்லியல் அகழாய்வு அறிக்கை வெளிவர என்ன தடங்கல்? எனவும் தனது நேர்காணலில் விளக்குகிறார். அத்துடன் நெல்லையின் முதல் பள்ளி, பாளையங்கோட்டை குறித்த வரலாற்றுச் சிறப்புகளையும் குறிப்பிடுகிறார்.
நேர்காணல் பதிவிற்கு உதவிய முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி , நெல்லை அவர்களுக்கு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:
ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளிவர என்ன தடங்கல்? | முனைவர் தொ.பரமசிவன்
மானுடவியல் பண்பாட்டு ஆய்வாளர்: பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
அன்புடன்
முனைவர். தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]