தலைமைச் செயலகத்தில் ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு
பெரும் முயற்சிக்குப் பிறகு ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தலைமை தாங்கி வழி அனுப்பி வைக்கின்றார். உடன் அதிகாரிகள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை நிர்வாகிகள் அறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த ஐம்பொன் சிலை கடந்த ஆறு மாதங்களாக ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் தமிழகத்தின் தலை சிறந்த ஓவியரும் சிற்பியும் ஆன ஓவியர் சந்துரு அவர்கள் வடிவமைத்து மகாபலிபுரத்தில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது. இச்சிலைகளின் உருவாக்கத்திற்கான நன்கொடைகளை வழங்கியோர், திரு பாலச்சந்திரன் இஆப (ஓய்வு), திரு கௌதம சன்னா, மற்றும் டாக்டர் சுபாஷிணி கனகசுந்தரம் ஆகியோராவர்.
இச்சிலைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெர்மனியில் லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட உள்ளன. அந்நாளில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கும் , திருக்குறள் நூல் கண்காட்சியும் நடைபெறுகின்றன.
ஐரோப்பாவில் நிறுவப்படும் இந்த முதல் ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலை நம் ஒவ்வொருவருக்கும் தலை நிமிர்வையும் பெருமையையும் உலகெங்கும் அளிக்கும் என்பதில் மகிழ்வு கொள்கிறோம்.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]