தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்துடன் இணைந்து நடத்தவிருக்கும் 2 நாட்கள் வட்டெழுத்துக் கல்வெட்டுப் பயிற்சி, டிசம்பர் 28-29 சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மதுரையில் நடைபெற உள்ளது. கல்வெட்டு எழுத்துக்களை வாசிக்கவும் எழுதவும் கற்பதன் மூலம் சரியான கல்வெட்டு வாசிப்பினைச் சுயமாக அறிந்து கொள்ளும் திறனை நீங்கள் பெறலாம். தமிழகத்தின் சிறந்த கல்வெட்டு ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியை வழங்க உள்ளார்கள்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தோர் மாணவர்களுடன் இந்த அறிய வாய்ப்பை பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அறிவிப்பில் தொடர்புக்கான தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து பதிந்து கொள்ளுங்கள். முறையாக வரலாற்றைப் பயில பண்டைய தமிழ் எழுத்துக்களைப் பயிலும் முயற்சியைத் தொடங்குவோம்.
-கல்வெட்டு பயிற்சிப்பட்டறை குழுவினர்