தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பயணம்-மதுரை

தமிழகத்தில் அதிலும் குறிப்பாக மதுரையில் பலப் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனாலும் கூட மதுரையின் வரலாற்று சிறப்புகள் கொண்ட இடங்களுக்கு நாம் சென்றிருக்க மாட்டோம். அல்லது அவை பற்றிய தகவல்கள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படியே சென்றிருந்தாலும் கூட முறையான தொல்லியல் பின்புலம் உள்ள தொல்லியல் அறிஞர்கள் நம்முடன் வந்து விளக்கிச் சொல்லும் போது நமக்கு ஏற்படும் புரிதல் என்பது மிகப் பெரிது தானே!

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பயணம் – இதோ உங்களுக்காக.

-மாங்குளம் தமிழி கல்வெட்டு..
-யானைமலை யோக நரசிம்மர் குடைவரை ஆலயத்தில் ஒரே செய்தி வட்டெழுத்து தமிழிலும், சமஸ்கிருதத்திலும் சுவர்களில்..
ஸ்ரீ பாண்டி முனீசுவரர்
கீழடி அருங்காட்சியகம்
… இன்னும் பல

மதுரையில் ஒரு நாள். – ஒரு வரலாற்றுப் பயணம். எப்போது? எங்கெங்கு செல்கிறோம்..? அதற்கான விவரங்களை இந்த அறிவிப்பில் காணலாம்.

மேலதிக தொடர்புகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பயண பொறுப்பாளர் திரு.சிவக.மணிவண்ணன்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

!!இந்த கட்டணத்தில் பேருந்துக்கான செலவு மற்றும் வழிகாட்டி தொல்லியல் வரலாற்று விளக்கமளிக்கும் அறிஞர்களுக்கான சன்மானமும் அடங்கும்.!!

ஒரு தொல்லியல் மரபுப் பயணத்தில் அனைவரும் சந்திப்போம்!

குறிப்பு: இதற்கு முன்னராக 28 &29 சனி – ஞாயிறு ஆகிய இரு நாட்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெறும் வட்டெழுத்து கல்வெட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதன் தொடர்ச்சியாக மறு நாள் இந்தப் பயணத்திலும் கலந்து கொண்டு பயன்பெறலாம்!

-சுபா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *