கணினி மற்றும் செல்பேசி தொழில்நுட்பங்களின் வழி குழந்தைகளுக்குத் தமிழ் பண்பாட்டினை மிக எளிதாக கொண்டு செல்லலாம் என்ற கருத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு முயற்சி.
”தமிழம் அறிவோம்” – குழந்தைகளுக்கான செல்பேசி மென்பொருள். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனையுடனும் வழிகாட்டுதலுடனும் குழந்தைகள் எளிய வகையில் தமிழ் வரலாறு, கலைகள், இலக்கியம், விளையாட்டுக்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருளாகும். இந்த மென்பொருள் தொகுப்பில் ”திருக்குறள் கதைகள்” பகுதி மிக முக்கியமான ஒரு பகுதி எனலாம். எளிய வகையில் திருக்குறள் செய்யுட்களையும் அதன் ஆழ்ந்த கருத்துக்களையும் குழந்தைகள் கற்கும் வண்ணம் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் ”திருக்குறள் கதைகள்” மென்பொருள் ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் 4.12.2019 அன்று வெளியீடு கண்டது.
இதனை கீழ்க்காணும் பகுதியிலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.
https://play.google.com/store/apps/details…
இதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு.கதிரவன் மற்றும் அவருடன் இணைந்து செயலாற்றும் செழியன், அகிலா, மற்றும் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.
—–