Home Video தென்கொங்கு நாட்டின் தொல்லியல் தடயங்கள்

தென்கொங்கு நாட்டின் தொல்லியல் தடயங்கள்

by admin
0 comment

வணக்கம்,
“தென்கொங்கு நாட்டின் தொல்லியல் தடயங்கள்” [Thenkongu Tholliyal Thadaiangal]
மரபு நடைப்பயணம்
https://youtu.be/LB-OAT7GFOo

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மதுரை கல்வெட்டுப் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றனர் நட்பு வரலாற்று இயக்கமான உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, கோவை பகுதி தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர் கெழுதகை நண்பர் திரு. மணிவண்ணன் அவர்களின் சீரிய முயற்சியில் “தென்கொங்கு நாட்டின் தொல்லியல் தடயங்கள் – வரலாற்றுச் சுற்றுலா” எனும் மரபு நடைப்பயணங்களை எதிர்காலத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் நடத்துவதற்கு முனைவர் சுபாஷிணியின் வழிகாட்டுதலில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னோட்டமாக கோயிற்கலை சமூக ஆய்வாளரின் உடுமலை சுற்றுப்பயணம் ஒன்றும் திட்டமிடப்பட்டிருந்தது.

இம்முயற்சி வெறும் சுற்றுப்பயணமாக இல்லாமல் ஒரு கருத்தரங்குடன் மரபு நடைப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. உடுமலையில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஜி.வி.ஜி. கல்லூரியில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் சசிகலா வழிகாட்டலில் தென்கொங்கு நாட்டின் தொல்லியல் எச்சங்களைக் காணும் மரபு நடைப்பயணம் அமைந்தது சிறப்பு. இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி அன்று நிகழ்த்தப்பட்ட மரபு அறியும் பயணத்தில் ஜி.வி.ஜி. கல்லூரி ஆய்வு மாணவியரும் பங்கேற்றனர்.

இந்த தொல்லியல் மரபு நடைப்பயணத்தில் குடிமங்கலக் கல்வெட்டு, சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோயில், மசராயப்பெருமாள் கோயில், அமரபுயங்கரீஸ்வரர் கோயில், பாறை ஓவியங்கள் ஆகியன வரலாற்று ஆர்வக் குழுவினரால் பார்வையிடப்பட்டு அவற்றின் சிறப்புகள் அறியப்பட்டது .

வரலாற்று-தொல்லியல் விளக்கமளித்தவர் – முனைவர். கோ. சசிகலா
காணொளி மற்றும் படங்கள் பதிவு – திரு. மணிவண்ணன், தமிழ் மரபு அறக்கட்டளையின் கோவைப்பகுதி ஒருங்கிணைப்பாளர்
காணொளி உருவாக்கம் – முனைவர். தேமொழி

பதிவைப் பார்த்து வரலாற்றை அறிவோம்…

நன்றி.
முனைவர் தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment