மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு


THF Heritage Video Release Announcement
மண்ணின் குரல் காணொளி:
குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.

கி.பி. 1536 ஆம் ஆண்டில், விஜயநகர பேரரசர் அச்சுத தேவராயர் ஆட்சிக்காலத்தில் குடிமங்கலத்தில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு, பிராமணர்களுக்குச் சத்திரம் ஏற்படுத்தக் கொடுக்கப்பட்ட நிலக்கொடையைக் குறிப்பிடுகிறது. இன்று பூளவாடி என அறியப்படும் பூளையபாடி பெரியமங்கலத்தில் இருக்கும் நிலம் கொடையாக அளிக்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது. நிலவும் கதிரும் நிலைக்கும் வரை கொடை தடையின்றி நெடுங்காலம் தொடர வேண்டும் (‘இந்த தன்மம் சந்திராதித்தவரையும் செல்லக்கடவதாக’) என்ற கருத்தில் வட்ட வடிவ சூரியனையும், பிறை வடிவ நிலவையும் புடைப்புச் சிற்பமாகக் கொண்டிருக்கிறது. அத்துடன் இது நிலக்கொடை என்பதால் வாமன உருவமும் அவற்றுடன் பொறிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளாக சுங்காரி முடக்கு, நாச்சியப்ப நயினான் காடு, ஒற்றைப்புளி, கொண்டன்பட்டி, பிள்ளையாண்டான் குட்டை என்ற பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இப்பகுதியின் நஞ்சை புஞ்சை தோட்டம் துரவு என அனைத்தும் கொடையின் பயன்பாட்டுக்கு இதன் மூலம் ஒதுக்கப்படுகிறது. இப்பகுதி பழங்குடியினர் ஆண்டுதோறும் மழைவேண்டி சிறப்பு வழிபாடு செய்யும் கல்வெட்டாக இன்று இது மாறியுள்ளது என்று வரலாற்று தொல்லியல் விளக்கவுரை தருகிறார் திரு. துரை. சுந்தரம்.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:
https://youtu.be/cjZEjJa84aI
குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு
| Gudimangalam Land Grant Stone Inscription

அன்புடன்
முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *