மதுரை நகர் வரலாற்றுச் சிறப்புகள் பல நிறைந்த ஒரு மாநகரம். மதுரை நகரின் அரிட்டாபட்டி பாறைகள் நிறைந்த ஒரு பகுதி. இப்பகுதியில் அமைந்திருக்கும் லகுளீசர் குடைவரைக் கோயில் தமிழகக் குடைவரை கோயில் அமைப்பில் தனிச்சிறப்பிடம் பெறுவது. இந்த குடைவரைக்கோயிலின் வரலாற்றையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் பற்றியும் அறிவோமா..? இங்குள்ள லகுளீசர் மற்றும் பிள்ளையார் சிற்பங்கள் முற்காலப் பாண்டியர் கட்டுமானக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. நடுவில் லிங்க வடிவமும் வலதுபுறத்தில் லகுளீசர் சிற்பமும், இடதுபுறம் பிள்ளையார் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளன.

இச்செய்திகளோடு மேலும் முற்கால பாண்டியர் கோயில் கட்டும் மரபு, துவாரபாலகர் சிற்ப வடிவம், லகுளீசர் யார் ? எங்கிருந்து வந்தவர், பாசுபத சைவத்தின் தொடர்பு ஆகிய செய்திகளோடு இந்த விழியப் பதிவு அமைகின்றது. இப்பதிவு தமிழ் மரபு அறக்கட்டளை 30.12.2019 அன்று ஏற்பாடு செய்த ஒரு நாள் மதுரை மரபுப்பயணத்தின் போது பதியப்பட்டதாகும். இதில் விளக்கங்களை வழங்குகின்றார் தமிழகத் தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர்.கோ.சசிகலா.
பதிவைப் பார்த்து வரலாற்றை அறிவோம்: https://youtu.be/zEUnq9MaCWg
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)