சென்ற ஞாயிற்றுக் கிழமை 15.03.2020 அன்று காலை 10:30 முதல் மதியம் 1 மணி வரை
தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு மற்றும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடெமி இணைந்த ஏற்பாட்டில் திட்டமிடப்பட்ட `உயராய்வு உரைத்தொடர் நிகழ்ச்சி` சிறப்பாக நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்புச் சொற்பொழிவுகள்;
1. கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்புகள், அவை தொடர்பான ஆய்வுகள் – பேரா.முனைவர்.நா.கண்ணன், மலேசியா
2. பண்டைய தமிழகத்தின் வழிபாட்டுக் கூறுகளும் அவை தொடர்பான ஆய்வுகளும் – முனைவர்.கோ.சசிகலா
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சென்னைப் பகுதி தமிழ் மரபு அறக்கட்டளை தோழர்களுக்கும், முன்னின்று ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக நிகழ்த்திய நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. விவேகானந்தனுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
1 comment
தமிழுக்கு நீங்கள் ஆற்றும் பணி சிறப்பானது எனக்கு சில வரலாற்று பக்கங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளது ஆனால் கால சுவடுகள் சரிவர கிடைக்க பெற இயலவில்லை அது என்னவென்றால் களப்பிரர்கள் ஆட்சி சுமார் 300 ஆண்டுகள் இருந்த பட்சத்தில் ஏன்அவர்களின் தரவுகள் கிடைக்க பெற இயலவில்லை இதற்கான விடை சரிவர கிடைக்க பெறவில்லை